சுதா சேஷய்யன் அவர்கள் ஆழ்வார்கள் பற்றி ஆற்றிய சொற்பொழிவு...
சுதா சேஷய்யன் ஒரு MBBS வைத்தியா் என்றாலும் தமிழோடு சரளமாக விளையாடுகிறது இவரது நா.
பகுதி 1 :
பகுதி 2 :
பகுதி 3 :
சுதா சேஷய்யன் அவர்கள் ஆழ்வார்கள் பற்றி ஆற்றிய சொற்பொழிவு...
சுதா சேஷய்யன் ஒரு MBBS வைத்தியா் என்றாலும் தமிழோடு சரளமாக விளையாடுகிறது இவரது நா.
பகுதி 1 :
பகுதி 2 :
பகுதி 3 :
இப்பார் மகிழ
நத்தார் தந்த
பெருமகன் வந்தார்
இவ்வையம் சிறக்கும்
வழிவகை செய்தார்!
அன்பா்களுக்கு,
இது தொடா்பான விரிவான விபரங்களைக் காண இங்கே அழுத்தவும்.
அந்த அந்த வயதில் செய்யவேண்டியவற்றை நினைந்து வேறு ஒரு வயதில் வருந்துவதும் மனம் வாடுவதும் இயல்பாய் வாழ்வில் நடக்கின்ற ஒன்று.
கவிஞா் வைரமுத்து அவா்கள் வாழ்வின் படி நிலைகளைப் பட்டியலிடுகிறார் இந்தக் கவிதையில்.
|
கம்பனுக்கு ஒரு கேள்வி!
|
இன்னும் சில புதிதாக இணைக்கப்பட்ட கவிதைகளுக்கு - இங்கே அழுத்தவும்.
இவா் பேசுவதே கவிதையாகும் விந்தையை நினைந்து அடிக்கடி வியந்து நின்றிருக்கிறேன். அந்த வியப்பின் உச்சியில் நின்று கொண்டு உங்களையும் அந்த வியப்பில் சங்கமிக்க அழைக்கிறேன். என்ன வருகிறீா்களா?
இது கவிஞா் வைரமுத்து அவா்களின் கவிதையாகிய பேச்சு!
தரவிறக்க விரும்பினால் : இங்கே அழுத்தவும்
சாலமன் பாப்பையா அவா்களைப் பட்டிமன்றங்களில் மட்டுமே பெரும்பாலும் பார்த்துப் பழகியவா்கள் பலா். அவா் ஆற்றிய ஒரு உரைப் தொகுப்பு இது.
நன்றி : sivajitv.com
இன்று என்ன பதிவு எழுதலாம் என்று யோசித்து(?!) இணையத்தை அலசியபோது, அன்று கேட்ட அதே நிலாப் பாட்டை அசைவூட்டம் (Animation) செய்திருந்த காணொளி ஒன்று கண்களில் சிக்கியது. (இப்பவும் சின்னப் பிள்ளை தானே!) தூர தேசங்களில் பறந்து வந்து பாட்டுப் பாடவும் கதைச் சொல்லச் சொல்லிக் கேட்கவும் ஆளைத் தேடும் இந்நாட்களில் இணையமும் இல்லாட்டி… கடவுளே எங்கட சனத்தை நீ தான் காப்பாற்ற வேண்டும்!
இதோ அந்த நிலாப் பாட்டு…
இது போன்ற சிறுவா்களுக்கான பாடல்களைக் கொண்ட காணொளிகளின் கொத்து ஒன்றையும் கீழ் இணைத்துள்ளேன்.
மேலுள்ள கீற்றுக்கு நேரடியாகச் செல்ல :
கவிஞா் வைரமுத்து அவா்களுடனான ஒரு நோ்காணல்…
இக்காணொளிக் கொத்து ஏழு ஒலி/ஒளிக் கீற்றுக்களைக் கொண்டது.
நம்மவா் என்ன தான் பிளேன் ஏறி பிரான்ஸ், யோ்மன், சுவிஸ் என்று பறந்தாலும், வேறு சிலரின் மனதினுள் விமானங்கள் (போர்) ஏற்படுத்திவிட்ட வடு பெரிது!
‘திருபாய் அம்பானி’ இந்தப் பெயா் வெற்றி பெற விரும்புபவா்களுக்கு ஒருவித மந்திரச் சொல்!
‘கனவு காணுங்கள்’ என்ற வாசகத் தொடா் அப்துல் கலாம் அவா்களால் பிரபல்யம் ஆனதை நினைவு கூா்பவா்கள் அதனை தன் வாழ்க்கையில் நடத்திக் காட்டிய இந்த நூற்றாண்டின் மாபெரும் ஊதாரணமாக அம்பானி அவா்களைக் கொள்ளலாம்.
கண்களில் பளிச்சிடும் கனவு… நெஞ்சுக்குள் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் அக்னி… இப்படி வலம் வருகின்றவா்கள் தான் எமக்குத் தேவை என்று இன்னும் ஒருவரைக் கை காட்டி விட்டு விலகிவிடுகின்ற மனோபாவம் சராசரி மனிதா்களாக நம்மை இனம் காட்டும். அவா்... இவா்… என்று கைகாட்டாமல் அது நாமாகவே விஸ்வரூபம் எடுப்பது தான் என் கனவு! அந்த இலக்கை நோக்கி நகா்ந்து செல்வதற்கு நாம் உண்மையாய் வென்றவா்கள் சிலரைத் தரிசிக்க வேண்டியது அவசியம்!
(குறிப்பு : மணிரத்னம் அவா்கள் அம்பானி அவா்களின் வாழ்க்கையை கருவாகக் கொண்டு இயக்கிய படம் தான் ‘குரு’)
சொல்வேந்தா் சுகிசிவம் அவா்களின் மற்றுமொரு சிறந்த உரைநிகழ்வாக இது அமைகின்றது. "தனிமனித அமைதியும் உலக அமைதியும்" என்ற தொனிப் பொருளில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை இது. நீண்ட காலத்திற்கு முற்பட்டது என்றாலும் அதற்கான தேவை இன்னும் இருந்து கொண்டே இருக்கின்றது.
கீ.வீரமணி அவா்கள் வாசித்தளிக்கும் அறிஞா் அண்ணாவின் புகழ் பெற்ற விவாதங்கள். சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளமை இதன் சிறப்பாகும்.
ஒன்பது பகுதிகளை உள்ளடக்கிய தனிக் கீற்றாக அமைகின்றது இந்தக் காணொளிக் கீற்று!
நேரடியாக காணொளிக் கீற்றுக்களைப் பார்வையிட : இங்கே அழுத்தவும்
‘சொல் வேந்தா்’ சுகி சிவம் அவா்கள் கம்பனின் கன்னித் தமிழினிமை பற்றியும் இராமயணச் சிறப்புக்கள் பற்றியும் ஆற்றிய உரை…
இவ் காணொளிக் கீற்றானது நான்கு ஒளிக் கீற்றுக்களை உள்ளடக்கியது.
நேரடியாக காணொளிக் கீற்றைக் கண்டு, கேட்டு மகிழ - இங்கே அழுத்தவும்
திருமணத்திற்கு முன் இருக்கின்ற உறவு நிலை, சுமூக நிலை எல்லாம் திருமணத்திற்குப் பின் தவிர்க்கமுடியாமல் மாறிவிடுகிறது. அது மாதிரியான களத்தை கையகப்படுத்துகின்றது மனுஷ்யபுத்திரனின் இக்கவிதை…
சோகத்தின் சுவடுகளை சொற்களில் அடக்கமுடியுமா? முடியுமே என்று விஸ்வரூபம் எடுக்கிறது அறிவுமதியின் இக் கவிதை! அறிவுமதி அவர்கள் தன் குரலில் தரும் இக்கவிதையின் களம் தவிர்க்க முடியாமல் கண்முன் விரிகின்றது. சொல்லமுடியாத சோகம் ஓடி வந்து ஒட்டிக் கொள்கின்றது…
தமிழருவி மணியன் அவர்கள் அவருக்கே உரிய அழகிய நடையில் கண்ணதாசனின் கவிதைகள் என்ற பொருளில் ஆற்றுகின்ற உரை…
Powered by eSnips.com |
“வலம்புரி” ஜானின் வற்றாத தமிழ் கேட்டுச் சிட்டாகப் பறக்காதோ உள்ளம்? பல தளங்கங்களைத் தொட்டு நிற்கின்ற பேச்சு குறிப்பாக தாயையும் தாய் மொழியையும் கொண்டாடுகின்றது.
வண்டாகப் பருக வருதலே
தமிழுக்கு நாமாற்றும்
தொண்டாகும்!
|
தொடர்பான பதிவு :
கடந்த பதிவில் புலவர் கீரன் அவர்களின் பெரியபுராணத் தொடரில் “சிறுதொண்டர்” பற்றிய சொற்பொழிவைத் தந்திருந்தேன். இப்பதிவில் அதன் தொடச்சியாக நந்தனார், திருநீலகண்டர் மற்றும் கண்ணப்பநாயனார் ஆகியோர் தொடர்பான உரையைப் பதிவு செய்கிறேன்.
(ஆரம்பத்தில் பதிவேற்றிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி!)
Powered by eSnips.com |
» மேலதிக ஒலிக் கீற்றுக்களின் திரட்டை நேரடியாக செவிக்குணவாக்க…
புலவா் கீரன் அவர்களின் பெரியபுராணச் சொற்பொழிவுத் தொடரில் – மகவரிந்து ஊட்டிய “சிறுதொண்டர்” அவர்களைப் பற்றிய உரை…
Powered by eSnips.com |
உருகாத மனமும் உருகும் திருவாசகம் அருளிய மணிவாசகரின் மணியான முத்துக்களில் ஒளிர்கின்ற ஓா் முத்தாக விளங்குவது திருவெம்பாவை.
மார்கழி என்றால் மறக்காமல் நினைவில் வரும் இத் திருவெம்பாவையை தன் தமிழால் தாலாட்டுகிறார் புலவா் கீரன் அவா்கள்!
Powered by eSnips.com |
மகாத்மா காந்தியை தன் வழிகாட்டி என்று குறிப்பிட்டு, ஆபிரிக்க – அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக காந்திய வழியில் போர்க் கொடி ஏந்திய பெரு மகன் “மாட்டின் லூதா் கிங்” அவா்கள்! அதன் விளைவாக அவா்களின் உரிமைகளை மீட்டதோடு நில்லாமல், 1964 ஆம் ஆண்டில் சமாதானத்திற்கான நோபல் பரிசினையும் வென்றெடுத்தார்!
அந்தப் பெருமகனை தமிழ் கொண்டு வாழ்த்துகிறார் கவிஞா் வைரமுத்து அவா்கள்!
இதோ அந்தக் கவிதை விரிகிறது இப்படி!
S.V. சேகா் மற்றும் கிரேஸி மோகன் இணைந்து வழங்கும் நகைச்சுவை நாடகம்…
|
அதென்னவோ தெரியவில்லை. இந்தக் காதை தொடா்பான பதிவுகள் அடிக்கடி என் வ.பூவில் இடம்பெறும் ஒன்று.(தலைப்பின் காரணம் அதுதான்!) அந்த வரிசையில் இது “புலவா் கீரன்” அவா்களின் அற்புதச் சொல்லாற்றலில்… அழகு தமிழ் நடையில்… இனிக்கும் தமிழில்… தவழ்ந்து வரும் மகாபாரதச் சொற்பொழிவு!
[இதனை ஆரம்பத்தில் ஒலி வடிவில் பதிவேற்றிய நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்!]
»ஒலிக் கீற்றுக்களின் திரட்டை நேரடியாக செவிக்குணவாக்க…
---இது தொடா்பாக ஏற்கனவே வந்த பதிவுகள்---
எந்தக் குழந்தையும்
நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே…அது நல்லவராவதும்
தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே!
- அடிக்கடி கேட்கும் பாடல். இருந்தும் என்ன “ஆகா அற்புதம் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவோம்.” ம்… சொல்பவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்… பயன்…? தெரியல…
சரி அது இருக்க இது சுகி சிவம் அவர்கள் “குழந்தைகளைப் பேணும் கலை” என்ற தொனிப்பட ஆற்றும் உரை…
மெளலியின் சிறந்த நாடகங்கள் வரிசையில் “Flight 172” குறிப்பிடத்தக்க ஒன்று. பல முறை பலராலும் பகிரப்பட்டு இருந்தாலும் முழுமையான தொகுப்பாக்கும் எண்ணத்தில் இங்கும் பதிவிடுகிறேன்.
வள்ளலார் அவர்களின் வாழ்வு நெறி காட்டி நிற்கும் காட்சிகளை விபரிக்கிறார் ‘சொல் வேந்தர்’ சுகி சிவம் அவர்கள்.
குறிப்பு : வள்ளலார் தொடர்பான மேலதிக தகவல்களைப் படிக்க - இங்கே அழுத்தவும்.
காட்சி… காட்சியோடு கைகோர்க்கும் கவிதை… விளைவு… அருமையான பார்வை அனுபவம்!
[அ]
[ஆ]
சுகி சிவம் அவர்களின் பேச்சு கருத்தாழம் மிக்கது மட்டுமல்ல தட்டிக் கொடுக்கும் தோழமை நிறைந்தது. அவரின் பேச்சுக்களில் சிதறிய சிந்தனை முத்துக்களை தொகுத்தால் அவை கீழ்வரும் ஒலிக்கீற்றுக்களாக மிளிரும்! உ(எ)ங்கள் உள்ளத்தில் நம்பிக்கை ஒளி வளரும்!
[அ]
|
[ஆ]
|
S.V. சேகரின் நாடகங்களில் இன்னுமொன்று…
|
காலம் – அதன் அருமை குறித்து சுகி சிவம் அவர்களின் சிந்தனை முத்துக்கள்…
பகுதி 1:
|
பகுதி 2:
|
உன்னை என்னை உலகப் பந்தை இயக்குவது எது? ஈர்ப்பு… விருப்பம்… காதல்… எல்லாம் கலந்த நம்பிக்கை…!
“நான் வாழ்க்கையை நேசிக்கிறேன்… நான் சந்தோசமாய் இருக்கிறேன்!” – என்றிங்ஙனம் இந்த மனிதன் பேசும் போது எங்கோ எனக்குள் பலத்த அடி விழுகின்ற ஒரு வித அனுபவம் ஏற்படுகிறது. (உங்களுக்கு…?)
இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட சொற்பொழிவாளர் “இளம்பிறை” மணிமாறன் அவர்களின் சொற்பொழிவுகளில் ஒன்று…
|
“ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
பூசை முற்றவு நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக்
காசில் கொற்றத் திராமன் கதையரோ”
[பொருள் : ஓசையால் உயர்ந்த பாற்கடல் போய் ஒரு பூனை பாற்கடல் முழுமையும் குடுக்க முயல்வது எவ்வளவு அறியாமையோ… அதே போன்றது குற்றமற்ற இராம சரிதத்தை அடியேன் ஆசை கொண்டு பாட முயல்கின்ற செயலும்.]
மேலே உள்ள பாடல் கம்பனின் அவையடக்கப் பாடல்களில் ஒன்று. இப்படி அவையடக்கம் பேசிய கம்பன் இராமாயணம் முழுமையும் வம்பாக செய்தவை ரசிக்கத் தக்கவை.
இவ்வளவும் எதற்காக நீ எழுதுகின்றாய் என்று யாராவது கேள்வி கேட்டால் நான் சொல்லக் கூடிய பதில் எனக்குத் தெரிந்ததை சொல்வதற்கு வேறு இடம் கிடைக்கவில்லை என்பதே! (அட பாவி…!)
சரி அஃதிருக்க கீழே நீங்கள் காணும் காணொளி திரை உலக மார்க்கண்டேயர் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் சிவகுமார் அவர்களின் ஆழந்த இலக்கியப் புலமையைச் செப்பக்கூடிய ஒன்றாகும்.
(குறிப்பு : மேலே உள்ள காணொளியை முழுவதுமாக கண்டுகளிக்க/தரவிறக்க Veoh Web Player ஐ தரவிறக்கவேண்டி ஏற்படலாம்.)
அது என்னவோ தெரியல இந்தப் பதிவும் மஹாபாரதம் தொடர்பான பதிவாகவே அமைந்து விட்டது. பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் எம்.ரி.வீ தொலைக்காட்சியில் ஒளி/ஒலிபரப்பான போது கையில் தினமுரசுப் பத்திரிகையில் வெளிவந்த தமிழ் மொழி பெயர்ப்பை வைத்துக் கொண்டு பார்த்து ரசித்த தொடர். (பலருக்கும் நினைவு இருக்கலாம்.)
தமிழில் கண்டு களிக்க… (காணொளிகளின் திரட்டு)
தமிழ் எங்கள் தாய் மொழி… தமிழ் மொழியில் என்னால் பேசமுடியும்… ஆகவே எனக்குத் தமிழ் தெரியும் என்று சொல்வது சரியா? பேச முடியும் என்பதால் மட்டுமே அந்த மொழி தெரியும் என்று அர்த்தப்படுத்துதல் அவ்வளவு சரியானதாக இருக்கமுடியும் என்று நான் நம்பவில்லை.
ஆக எம் மொழியின் கூறுகளை அதன் செழுமையை தொன்மையான செம்மொழி என்கின்ற பெருமையை நாம் அறிந்து கொள்வதுடன் புலம்பெயர் நாடுகளில் வாழும் தலைமுறைக்கு அதனை முறைப்படி சொல்லிக் கொடுப்பது எம் அடையாளத்தைக் காக்க உதவும்.
அந்த வகையில் கீழ்க்காணும் காணொளிகள் பேருதவி செய்யும் என்பது என் எண்ணம்.
தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தால் (Tamil Virtual University) வடிவமைக்கப்பட்ட பாடநெறிகளுக்கமைவாக தமிழ் கற்பிக்கப்படுகிறது. (ஆங்கில வழியில் தமிழ்)
மேலதிக கற்கை நெறிகள் – இங்கே அழுத்தவும்
இந்தப் பதிவு கடந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாக அமைகிறது. சுகி சிவம் அவர்கள் ஆற்றிய “மகாபாரதம்” என்ற பொருளில் ஆன சொற்பொழிவின் மிகுதிப் பகுதிகளை இணைத்து நிறைவு செய்கிறேன்.
Powered by eSnips.com |
கடந்த பதிவில் சுகி சிவம் அவர்களின் அற்புத சொல்லாற்றலில் மகாபாரதம் சொற்பொழிவின் இரு பகுதிகளை இணைத்திருந்தேன்.
இந்தப் பதிவில் மேலும் சில… (தொடர்ச்சியாக இழுக்கும் எண்ணம் எதுவுமில்லை. ஆகக்கூடியது இன்னுமொரு பதிவு…)
பகுதி 03 – பகுதி 09
Powered by eSnips.com |
கதை கேட்டு வளர்ந்த சமூகம் எங்கள் தமிழ்ச் சமூகம். நீதிக் கருத்துகளையும் வாழ்வியலையும் கதைகளில் சொல்வதன் மூலம் கேட்பவர் உள்ளத்தில் ஆழப் பதிய வாய்ப்பு உண்டு.
அந்த வகையில் இரு மா(பெரிய) கதைகள் என்று சொல்லக்கூடிய சிறப்பிற்குரியன இரு பெரு இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகியனவாகும். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத மனது விரும்புகின்ற வகையில் இவை இரண்டும் அமைவது ஒரு வித வியப்புத் தான்.
இந்தப் பதிவில் மகாபாரதம் என்று மா காதையை, வியாசர் சொல்ல பிள்ளையார் தன் தந்தத்தால் எழுதிய காதையை, அதை அப்படியே வைஷ்ணவரான வில்லி புத்தூராள்வார் தமிழில் எழுதிய காதையை அடியேன் மறுபடியும் எழுதப்போவதில்லை. (அடே போதுமடா…!!!)
சொல் வேந்தர் சுகி சிவம் அவர்கள் அவர் பாணியில் தன் அழகு தமிழால் சொல்ல வருகின்றார்.
பகுதி 1 :
|
பகுதி 2:
|
மற்றைய பகுதிகளை அடுத்த பதிவில் இணைக்கிறேன்.
சொல்ல ஒன்றும் இல்லைங்க… நீங்க நாடகத்தைக் கேளுங்க…
அப்பாவுக்கு கல்யாணம் |
போட்டிக்குப் போட்டி |
“சொல் புதிது
பொருள் புதிது
சுவை புதிது…”
என்றிங்ஙனம் தன் தமிழை இறுமாந்து சொன்னவன் பாரதி.
கம்பீரமான தமிழுக்கு மட்டுமல்ல தோற்றத்திற்கும் சொந்தக்காரன்.
அந்த மீசைக் கவியை தன் அழகு தமிழால் தாலாட்டுகிறார் சொல் வேந்தர் சுகி சிவம் அவர்கள்.
|
கிரேஸி மோகனின் சில நகைச்சுவை நாடகங்களை ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருக்கிறேன். இந்தப் பதிவில் மேலும் சில…
“உன்னை அறிந்தால்
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்”
கவியரசு கண்ணதாசனின் பிரபலமான பாடல்.
இந்தக் கருத்தியலை முன்வைக்கும் சுகி சிவம் அவர்களின் உற்சாகப் பேச்சு…
பகுதி 1 :
பகுதி 2 :
வாய் பேசும் வார்த்தைகளால் என்ன பயன்? ஆகவே எதுவும் சொல்லப் போவதில்லை…
கலைஞர் கருணாநிதி அவர்கள் கண்ணதாசனோடு கொண்ட தோழமை குறித்து கண்ணதாசனின் பிறந்த தினம் ஒன்றில் ஆற்றிய உரையின் தொகுப்பு…
மேலே உள்ள காணொளி எட்டு ஒலி/ஒளிக் கீற்றுக்களைக் கொண்ட தனிக் கீற்றாக அமைகிறது.
நேரடியாக ஒவ்வொரு கீற்றுக்களையும் பார்வையிட/கேட்க : இங்கே அழுத்தவும்
நன்றி : sivajitv
கீழே உள்ள பதிவில் கவிஞர் தாமரை அவர்களின் நேர்காணலைத் தந்திருக்கிறேன். அந்த நேர்காணலில் இடம்பெற்ற கவிதையைப் பலரும் அவர்களின் வ.பூக்களில் தந்திருக்கிறார்கள்.
அந்தக் காலப் புலவர்கள் அறம் பாடியது போன்ற தொனியில் அமைந்தது கவிஞர் தாமரையின் இந்தக் கவிதை… (கருத்துக்களோடு) முழுமையான உடன்பாடு இல்லாவிட்டாலும் அந்தக் கவிதையின் ஒலி வடிவவை இணைக்கிறேன்.
கண்ணகி மதுரையை எரித்த போது அக்கினி பகவானிடம் குழந்தைகளை எதுவும் செய்யவேண்டாம் என்று சொன்னதாக நினைவு. (பிழையெனில் திருத்தவும்.)
அந்தக் கருத்தை எதிரொலிக்கிறது கவிஞரின் பின் குறிப்பு.
|
கவிஞர் தாமரை நுட்பமான உணர்வுகளை கவிதைகளில் கொண்டு வரக்கூடிய திறமையாளர்;தமிழ் உணர்வாளர்.
அவர் கனடியத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி இது.
இது "கந்த புராணத்தில் - சிவ உபதேசம்", திரு முருக கிருபானந்தவாரியார் அவர்களின் சொற்பொழிவு...
|
பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் சிவாஜி கணேசன் அவர்களை நேர்கண்டபோது…
கண்ணப்ப நாயனார் அவர்களின் வரலாறு பல பேருக்குத் தெரிந்திருக்கலாம். (அது யார் அப்பன் என்று கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். )
கண் தானத்தை உலகத்தில தொடக்கி வைச்சது கண்ணப்ப நாயனாரோ என்று கேள்வியை கேட்கவைப்பது அவர் இறைவனுக்கு தன் கண்ணைக் குற்றி எடுத்துக் கொடுத்த அளப்பெருஞ் செயல்!
“சொல் வேந்தர்” சுகி சிவம் அவர்கள் தனது வியத்தகு பேச்சாற்றலால் கண்ணப்ப நாயனாரை உங்கள் கண் முன் கொண்டு வருகின்றார். (மொத்தமாக எட்டு ஒளிக் கீற்றுகளை உள்ளடக்கிய தனிக்கீற்றாக கீழ் உள்ள காணொளி அமைகின்றது.)
காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் “அய்யா அம்மா அம்மம்மா…” நாடகத்தின் ஒலி வடிவத்தை ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருந்தேன். இது காணொளி வடிவில்…
பகுதி 1:
பகுதி 2:
பகுதி 3:
பகுதி 4:
வாமன அவதாரம் எடுத்த நாராயணன் மகாபலி மன்னனிடம் மூன்றடி மண் தானம் கேட்க, குள்ளமான உருவத்துடன் வந்திருப்பது பகவான் என்று அறியாத மகாபலி மன்னன், “மூன்றடி மண் தானே… தாராளமாக எடுத்துக்கொள் என்று சொல்ல…” பகவான் விஷ்வ ரூபம் எடுத்து ஒரு அடியால் பூமியையும் மறு அடியால் ஆகாயத்தையும் அளந்து மூன்றாவது அடி எங்கே வைக்க என்று கேட்க, திகைத்த மகாபலி மன்னன் “என் தலையில் வைக்கவும்…” என்றானாம்.
மேலே உள்ள புராணக் கதையை சொல்ல வந்த காரணம் என்னவென்றால், “ஹைக்கூ” கவிதைகளும் அளவில் சிறியதாக இருந்தாலும் கருத்து ரீதியில் அவை மனதில் ஏற்படுத்தக்கூடிய சலனங்கள் மிகப் பெரியது என்ற கருத்தை முன்வைக்கத் தான். (எங்களுக்கு தெரியாதாக்கும்… )
சரி என் கருத்து இருக்கட்டும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் “ஹைக்கூ” பற்றி சொல்கின்ற கருத்தைக் கேளுங்கள். (அவரின் குரலில் அல்ல – குரல் சிறிராம்)
|