- ஜோடிப் பொருத்தம்
|
- One more Exorcist
|
- மனைவிகள் ஜாக்கிரதை
|
- அன்னம்மா பொன்னம்மா – பகுதி 1
|
- அன்னம்மா பொன்னம்மா – பகுதி 2
|
- அல்வா
SVe_drama_Halwa.wm... |
|
|
|
|
|
SVe_drama_Halwa.wm... |
திருப்புகழ் அருளிய அருணகரிநாதர் பற்றி திரு முருக கிருபானந்தவாரியார் அவர்களின் சொற்பொழி…
பகுதி 1:
|
பகுதி 2:
|
தந்தை பெரியார் தொடர்பாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் சுவையான உரை.
பகுதி 1:
பகுதி 2:
சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின் காணொளிக் கீற்றுக்கள்... இராமாயணத்தில் ரசிக்கக்கூடிய பகுதிகளை தொட்டுச் செல்கின்றன இந்த ஒளிக் கீற்றுக்கள்...
அட கறுப்பில் இத்தனை விசயம் இருக்கா?
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் பல விடயதானங்களில் பேசுகின்ற காணொளி...
வள் வள் என்று குலைத்து மேல் பாய்ந்து கடித்துக் குதறிப் பின் காலை நக்கி வாலை ஆட்டும் நாய் போல இந்த கடலும்... அலைகளை அகலமாக்கி உயரமாக்கி பாய்ந்து தனக்குள் எல்லாம் அடக்கம் செய்துவிட்டு எவ்வளவு அப்பாவித்தனத்தோடு கரையை முத்தமிடுகிறது...
கவிஞர் அறிவுமதி அவர்களின் குறும்படம் கவிதை போல் சொல்கிறது அந்தச் சோகத்தை...
பாரதப் பிரதமர் நேரு அவர்கள் இறந்தபோது கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஒரு அஞ்சலிக் கவிதை எழுதியிருந்தார். அந்தக் கவிதைக்கு இசையமைத்தது தான் தனது முதல் பாடல் இசையமைப்பு என்று சொல்லும் இயையராஜா அவர்கள் தனது குரலில் அதனைப் பாடுகின்றார்...
கவியரசு கண்ணதாசனின் கவி வரிகளைப்(நேரு மறைவின் போது எழுதியதை) படிக்க சிலருக்கு ஆர்வமாக இருக்கலாம்...
சீரிய நெற்றி எங்கே
சிவந்தநல் இதழ்கள் எங்கே
கூரிய விழிகள் எங்கே
குறுநகை போன தெங்கே
நேரிய பார்வை எங்கே
நிமிர்ந்தநன் நடைதா னெங்கே?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்த திங்கே!
அம்மம்மா என்ன சொல்வேன்
அண்ணலைத் தீயிலிட்டார்
அன்னையைத் தீயிலிட்டார்
பிள்ளையைத் தீயிலிட்டார்
தீயவை நினையா நெஞ்சைத்
தீயிலே எரியவிட்டார்
தீயசொல் சொல்லா வாயைத்
தீயிலே கருகவிட்டார்!
வேறு
பச்சைக் குழந்தை
பாலுக்குத் தவித்திருக்க
பெற்றவளை அந்தப்
பெருமான்அழைத்துவிட்டான்
வானத்தில் வல்லூறு
வட்டமிடும் வேளையிலே
சேங்க்கிளியைக் கலங்கவிட்டுத்
தாய்க்கிளிளைக் கொன்றுவிட்டான்
சாவே உனக்குகொருநாள்
சாவுவந்து சேராதோ!
சஞ்சலமே நீயுமொரு
சஞ்சலத்தைக் காணாயே!
தீயே உனக்கொருநாள்
தீமூட்டிப் பாரோமோ!
தெய்வமே உன்னையும்நாம்
தேம்பி அழ வையோமோ!
யாரிடத்துப் போயுரைப்போம்!
யார்மொழியல் அதைதிகொள்வோம்?
யார்துணையில் வாழ்ந்திருப்போம்?
யார்நிழலில் குடியிருப்போம்?
வேரோடு மரம்பறித்த
வேதனே எம்மையும் நீ
ஊரோடு கொண்டுசென்றால்
உயிர்வாதை எம்கில்லையே…
நீரோடும் கண்களுக்கு
நம்மதியை பார்தருவார்?
நேருஇல்லா பாரதத்தை
நினைவில்யார் வைத்திருப்பார்?
ஐயையோ! காலமே!
ஆண்டவனே! எங்கள்துயர்
ஆறாதே ஆறாதே
அழுதாலும் தீராதே!
கைகொடுத்த நாயகனைக்
கண்மூட வைத்தாயே
கண்கொடுத்த காவலனைக்
கண்மூட வைத்தாயே
கண்டதெல்லாம் உண்மையா
கேட்டதெல்லாம் நிஜம்தானா
கனவா கதையா
கற்பனையா அம்மம்மா…
நேருவா மறைந்தார்; இல்லை!
நேர்மைக்குச் சாவே இல்லை!
அழிவில்லை முடிவுமில்லை
அன்புக்கு மரணம் இல்லை!
இருக்கின்றார் நேரு
இங்கேதான் இங்கேதான்
எம்முயிரில், இரத்தத்தில்,
இதயத்தில், நரம்புகளில்,
கண்ணில், செவியில்,
கைத்தலத்தில் இருக்கின்றார்
எங்கள் தலைவர்
எமைவிட்டுச் செல்வதில்லை!
என்றும் அவர் பெயரை
எம்முடனே வைத்திருப்போம்
அம்மா…அம்மா…அம்மா…!
-----------------------------------------------------
நன்றி : http://rethinavelu.wordpress.com [இவரின் வ.பூவில் இருந்து பெறப்பட்டது.]
கவியரசர் கண்ணதாசனின் மகன், காந்தி கண்ணதாசன் தனது குடும்பப் பின்ணனி பற்றி இந்தக் காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்...