ஒளி மயமான எதிர்காலம் என்ற தலைப்பில் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு இது…
தரவிறக்க இங்கே அழுத்தவும்
ஒளி மயமான எதிர்காலம் என்ற தலைப்பில் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு இது…
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பாட்டுக்களால் கோட்டை கட்டிய கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். திரை இசைப் பாடல்களை எழுதியவா்களில் மறக்கமுடியாத ஆளுமை கொண்ட கவிஞன் கல்யாணசுந்தரம். அப்படிப்பட்ட கவிஞனுக்கு எடுக்கப்பட்ட விழாவில் கவிஞா் வைரமுத்து ஆற்றிய பேருரை!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய இணையத்தளம் இது…
என்ன சொல்ல…? கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க… லியோனி குழுவினா் வழங்கும் பட்டிமன்றம்…
காணொளிகளின் கீற்று…
சிவனை நினைந்து செய்யப்படும் வழிபாடுகளில் ஒன்று பிரதோஷ வழிபாடு. பிரதோஷ விரதத்தின் மகிமை பற்றி சொல்வேந்தா் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு இது.
தரவிறக்க இங்கே அழுத்தவும்
“அடியார்க்கு நல்ல பெருமாள்” என்ற தலைப்பில் அருணகிரிநாதர் அவர்கள் பற்றி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு…
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பெற்றோருக்கு மிகவும் பெருமை சேர்ப்பவா்கள் மகனா மகளா? என்ற தலைப்பில் சுகி சிவம் அவர்கள் நடுவராக கலந்து சிறப்பிக்கும் பட்டிமன்றம்.
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பன்னிரு திருமுறைகளில் பத்தாவது இடத்தில் வைத்து போற்றப்படுவது திருமந்திரம். திருமூலா் அருளிய இந்த நூலினது விளக்கத்தை தெளிவாக எடுத்துக் காட்டி உரையாற்றுகிறார் புலவா் கீரன் அவா்கள்.
பகுதி 1:
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பகுதி 2:
தரவிறக்க இங்கே அழுத்தவும்
நீரிழிவு நோய் தொடர்பாக நடந்த விழிப்புணா்வு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சொல் வேந்தர் சுகி சிவம் அவர்கள் நிகழ்த்திய பயனுள்ள சொற்பொழிவு…
காணொளிக் கீற்றுக்களின் தொகுப்பு…
ஒலிக் கீற்று தனியாக…
தரவிறக்க இங்கே அழுத்தவும்
சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் ஞானிகள் என்ற பொருளில் ஆற்றிய சொற்பொழிவு…
பகுதி 1:
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பகுதி 2:
தரவிறக்க இங்கே அழுத்தவும்
“துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்” என்ற திருஞானசம்பந்தரின் தேவாரத்தை எடுத்துக்கொண்டு அந்த தேவாரத்தின் பின்னணியையும் அதில் ஒளிந்திருக்கும் ஆழ்ந்த கருத்துக்களையும் எடுத்துக் காட்டி உரையாற்றுகிறார் இளம்பிறை மணிமாறன் அவா்கள்.
அந்த தேவாரத்தின் முழு வடிவம் :
துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
தரவிறக்க இங்கே அழுத்தவும்
விநாயகா் பெருமை என்ற பொருளில் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு
பகுதி 1:
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பகுதி 2:
தரவிறக்க இங்கே அழுத்தவும்
இளம்பிறை மணிமாறன் அவா்கள் “எப்போ வருவாரோ?” என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்வில் கலந்து கொண்டு நலம் தரும் சொல் என்ற தலைப்பில் ஆழ்வார்கள் குறித்து நிகழ்த்திய சொற்பொழிவு
தரவிறக்க இங்கே அழுத்தவும்
சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு வரிசையில் இன்னுமொன்று…
தரவிறக்க இங்கே அழுத்தவும்
அவ்வப்போது இணையத்தில் கண்டெடுத்த ஒலிப் புத்தகங்களை உங்களோடு பகிர்ந்து வந்துள்ளேன். அந்த வரிசையில் இன்னுமொரு ஒலிப் புத்தகம் இது!
கிருஸ்ணா… கிருஸ்ணா… என்ற இந்த ஒலிப் புத்தகம் உங்களுக்கும் அளவில்லா ஆனந்தத்தை தரும் என்று நம்புகிறேன்.
எழுத்து இந்திரா பார்த்தசாரதி்; குரல் ரேவதி சங்கரன்.
தரவிறக்க இங்கே அழுத்தவும் (.rar கோப்பாக அமைவதால் ஒரே மூச்சில் தரவிறக்கி விடலாம்.)
கி.மு/கி.பி என்ற இந்தப் ஒலிப் புத்தகமானது மனிதன் தோன்ற முதல் உலகம் இருந்த நிலையையும் உயிர்களின் தோன்றலையும் மனித நாகரீகத்தின் வளா்ச்சியையும் நடந்த போர்கள் மற்றும் சரித்திரத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் ஆகியவற்றையும் தொட்டுச் செல்கிறது.
எழுத்து மதன். குரல் சார்ள்ஸ்.
தரவிறக்கி கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்.
தரவிறக்க இங்கே அழுத்தவும் (.rar கோப்பாக ஒரே மூச்சில் தரவிறக்கி விடலாம்.)
குறிப்பு – இந்த ஒலிப்புத்தகத்தை முதலில் தரவேற்றிய நண்பருக்கு நன்றிகள்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை மூன்று.
அந்த வகையில் இந்தப் பதிவில் பாரதியின் குயில் பாட்டைப் பற்றி புலவா் கீரன் அவா்கள் நிகழ்த்தும் உரையை இணைக்கிறேன்.
பகுதி 1 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பகுதி 2 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
குயில் பாட்டு மின்னூல் |
விஸ்ணுவின் அவதாரங்களில் பலராலும் விரும்பப்படும் அவதாரம் கிருஸ்ண அவதாரமாகும். கண்ணன் எப்போதும் ஆனந்தமாக இருப்பது எப்படி என்பதை வாழ்ந்து காட்டியவன். அவன் கவலைப் பட்டதாக படித்த நினைவே இல்லை. பிறக்கும் போதே சிரித்த குழந்தையாக தோன்றியவன். போர்களத்தில் அர்சுனனின் தேரோட்டியாக வந்தபோது கூட எவ்வித சஞ்சலமும் இன்றி வலம் வந்தவன்.
கண்ணனை பலவாறு கற்பனை செய்து பலரும் அனுபவித்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் புது வித அனுபவங்களைத் தருபவன் அவன்.
இப்படி அவனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
அது நிற்க, கண்ணன் வந்தான் என்ற இந்த ஒலிப் புத்தகத்தை கேளுங்கள். படிப்பது ஒரு வித சுகம் என்றால் கேட்பது இன்னொரு வகையில் சுகம்!
கண்ணை மூடி கண்ணனை உள் நினை
கவலையெல்லாம் விட்டுப்போகும் உனை!
சரி தரவிறக்கி கேட்க இங்கே அழுத்தவும்.
(தரவேற்றிய அன்பருக்கு நன்றிகள். _/\_)
பிள்ளைகளை வளா்த்தல் ஒரு விதத்தில் கலை. தன் ஆசைகளை லட்சியங்களை பிள்ளை மேல் திணிக்காமல் பிள்ளையின் ஆசைகளையும் லட்சியங்களையும் மதித்து அவா்களை திறம்பட வழி நடத்தும் பெற்றோர் எமது சமுதாயத்தில் குறைவு.
அந்த வகையில் இந்த உரை இது குறித்த சிந்தனையை ஆலோசனையை வழங்கி சமுதாயத்திற்கு தேவையான விழிப்புணா்வை வழங்குகிறது.
சொல்வேந்தா் சுகி சிவம் ஆற்றும் இந்த உரை உங்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.
பகுதி 1 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பகுதி 2 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
இன்றைய வீரகேசரியில் (19-02-2011) பிரசுரிக்கப்பட்ட சொல்வேந்தா் சுகி சிவம் அவா்களின் பேட்டி இது.
ஆா்வம் உள்ளவா்கள் தரவிறக்கிப் படிக்கலாம்.
தரவிறக்க இங்கே அழுத்தவும்
இந்த ஒலிப் புத்தகம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவிய திரு நாராயண மூர்த்தி அவா்களைப் பற்றியது.
அவரைப் பற்றி wikipedia இல் இப்படி குறிப்பு வரையப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய இந்திய தொழிலதிபர். திரு நாராயண மூர்த்தி கடந்த 2002ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது இவர் இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார். பணியிலிருந்து ஒய்வு பெற்றபின், தமது நேரத்தை சமுகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.
இந்திய அரசு, அவரது தொண்டுள்ளத்தை பாராட்டி தேசத்தின் உயரிய விருதாகிய பத்ம விபூசண் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
சரி அந்த ஒலிப் புத்தகத்தை தரவிறக்க…
- நன்றி wikipedia மற்றும் தரவேற்றிய நண்பருக்கு!
“எப்போ வருவாரோ” என்ற தொடா் சொற்பொழிவு வரிசையில் மாணிக்கவாசகா் (மணிவாசகா்) பற்றி சொல்வேந்தா் சுகி சிவம் அவா்கள் ஆற்றிய சொற்பொழிவு
(காணொளியை தரவேற்றிய அன்பருக்கு நன்றிகள்)
பகுதி 1 : (ஒலி வடிவம் மட்டும் – கீழே செல்க.)
பகுதி 2 : (ஒலி வடிவம் மட்டும் – கீழே செல்க.)
மேலே உள்ள காணொளிகளின் ஒலி வடிவத்தை மட்டும் தரவிறக்க விரும்பினால்…
சொல்வேந்தா் சுகி சிவம் அவா்களின் சொற்பொழிவு வரிசையில் இன்னுமொன்று இது. ஆனந்த அதிர்வுகள் என்ற தலைப்பில் சுகி சிவம் அவா்கள் ஆற்றிய சொற்பொழிவு.
பகுதி 1 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பகுதி 2 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
தாய் மூலம் பூமிக்கு வருகிறோம். பானை வனையும் குயவன் போல உடல் செய்து உடலுக்குள் உயிர் உலவவிட்டு தாய் மூலம் பூமிக்கு அனுப்புகிறார் கடவுள்! தான் எங்கும் இருக்க முடியாது என்று கருதியதால் கருணையை அன்பை காதலை தாய் மூலம் உயிர்களுக்கு ஊட்டுகிறான் ஒளி போல் தெரியும் மேனியன்!
என்றும் துறக்கமுடியாத இச்சொந்தம் ஞானிகளையும் விட்டுவிடுவதில்லை என்பதற்குப் பட்டினத்தார் சாட்சி!
ஒப்புயா்வற்ற இச்சொந்தம் பற்றி அவள் சிறப்புகள் பற்றி அன்னை தமிழை அருகழைத்து அருவியாய் சொற்கள் தாவென இறைஞ்சி, வேண்டி தாயின் மேனியெங்கும் தங்கம் என தக தகக்கும் தமிழ் கொண்டு அழகு செய்கிறார் தமிழருவி மணியன் அவா்கள்!
இது தமிழருவி மணியன் அவா்களின் அற்புதச் சொல்லாற்றலால் இழைக்கப்பட்ட பேச்சு! கேட்பீா்! தாயைக் கொண்டாடுவீா்!
தரவிறக்க இங்கே அழுத்தவும்
ஆண்டின் முதல் நாள். ஆனந்தமாய் தொடங்குவோம்… நீண்ட கவலைகளின் பட்டியலை தள்ளி வைத்துவிட்டு உதடுகளுக்குச் சிரிக்கச் சொல்லிக் கொடுப்போம்!
ஆனந்தமான இந்த நாளில் பிரபலங்கள் பலா் சேர்ந்து தந்த நகைச்சுவை விருந்து உங்களுக்காய்…
சுகி சிவம், தென்கச்சி சுவாமிநாதன் மற்றும் சிலா் சோ்ந்து படைக்கும் (வெடிக்கும்) நகைச்சுவை விருந்து!
தரவிறக்க இங்கே அழுத்தவும்