திரை இசைப் பாடல்களை பாமரனும் ரசிக்கும் வண்ணம் தமிழை எளிமைப் படுத்தியவன் கண்ணதாசன். என்றும் நின்று இசைக்கும் பாடல்களை தமிழ் திரை உலகிற்கு தந்த மகா கவிஞன். இவனை திரை இசைப் பாடல்களின் மூலமாக மட்டும் தரிசிக்கும் பலருக்கு கவிஞரின் கவிதைகள் மற்றும் இன்ன பிற தகவல்களை தரமான தமிழால் எடுத்துக் காட்டுகிறார் இங்கே தமிழருவி மணியன் அவர்கள்.
காணொளிகளின் திரட்டு
காணொளிக் கீற்றுக்களின் திரட்டிற்கு செல்ல இங்கே அழுத்துங்கள்.
ஒலிக் கீற்றினை மட்டும் தரவிறக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.



“எங்கே போகிறோம் நாம்?” இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கின்றோம். இந்தக் கேள்வியைத் தலைப்பாக்கி சிந்தனை முத்துக்களை விதைக்க வருகின்றார் தமிழருவி மணியன்! கேளுங்கள்… சிந்தனைப் பூக்களை மனதோரம் மலர விடுங்கள்…!
தாய் மூலம் பூமிக்கு வருகிறோம். பானை வனையும் குயவன் போல உடல் செய்து உடலுக்குள் உயிர் உலவவிட்டு தாய் மூலம் பூமிக்கு அனுப்புகிறார் கடவுள்! தான் எங்கும் இருக்க முடியாது என்று கருதியதால் கருணையை அன்பை காதலை தாய் மூலம் உயிர்களுக்கு ஊட்டுகிறான் ஒளி போல் தெரியும் மேனியன்!
இது தமிழருவி மணியன் அவா்களின் அற்புதச் சொல்லாற்றலால் இழைக்கப்பட்ட பேச்சு! கேட்பீா்! தாயைக் கொண்டாடுவீா்!