அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் முருகன் பற்றி அவனது குணாதியங்கள் பற்றி சுதா சேஷய்யன் அவர்களின் அருமையான சொற்பொழிவு இது.
(தரவேற்றிய அன்பருக்கு நன்றிகள் பல!)
ஒலிக் கீற்றினை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்.
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் முருகன் பற்றி அவனது குணாதியங்கள் பற்றி சுதா சேஷய்யன் அவர்களின் அருமையான சொற்பொழிவு இது.
(தரவேற்றிய அன்பருக்கு நன்றிகள் பல!)
ஒலிக் கீற்றினை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்.
பாரதியார் குறித்து யார் உரையாற்றினாலும் அலுக்காமல் கேட்கலாம். காரணம் புத்துணர்ச்சி தரும் புரட்சிக் கருத்துக்கள்! இந்தப் பதிவில் சினீவாசன் அவர்கள் ஆற்றிய உரையை தருகிறேன்.
முன்பு நான் கேள்விப்படாத பல தகவல்களை இவரின் உரையினூடாகக் கேட்டு மெய்சிலிர்ப்பு ஏற்பட்டது.
இந்த அருமையான உரையை இணையத்தில் தரவேற்றிய அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல.
ஒலிக்கீற்றை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்
சுதா சேஷய்யன் அவர்களின் சொற்பொழிவுகள் சிலவற்றை ஏற்கனவே இந்த வ.பூவில் இணைத்திருந்தேன். அந்த வரிசையில் இது இன்னுமொன்று.
இராமாயணத்தில் வருகின்ற பெண் கதாபாத்திரங்களை அவர்களின் குண இயல்புகளை, சொல்லாமல் விடுபட்ட விடயங்களை, குறிப்பால் உணர்த்தப் படுகின்றவற்றை என்று பல தளங்களில் நின்று தன் நேர்த்தியான தமிழால் உரைசெய்கின்றார் சுதா சேஷய்யன் அவர்கள்.
கேளுங்கள்… இன்புறுங்கள்…
ஒலித் தரம் அவ்வளவு நன்றாக இல்லாவிட்டாலும் கேட்கும் இன்பத்தை நிச்சயமாக பாதிக்காது. இதனை ஆரம்பத்தில் பதிவேற்றிய அன்பர் முரளி அவர்களுக்கு நன்றி.
ஒலிக் கீற்றினை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்.
எல்லோருக்கும் படியளப்பதாக சொல்லப் படும் கடவுள் யாசகம் கேட்பதாவது? இந்தக் கேள்வியை தொடுத்து சுவைபட உரையாற்றுகிறார் இளம்பிறை மணிமாறன் அவர்கள்.
தரவிறக்க இங்கே அழுத்தவும்
சங்கத் தமிழன் “யாதும் ஊரே யாவரும் கேளிர்…” என்று உலக ஒருமையைப் பற்றி என்றைக்கோ சிந்தித்து விட்டான். கணியன் பூங்குன்றனார் என்ற அந்தப் புலவனின் சிந்தனை விசாலமானது. தொடர்ந்து வரும் வரிகளைப் பாருங்கள். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” எத்தனை உயா்ந்த உண்மை!
தமிழருவி மணியன் அவா்கள், யாதும் ஊரே யாவரும் கேளிர்… என்ற வரிகளோடு சிந்திக்கும் வகையில் ஆற்றும் உரை இது…
முதலில் அந்தப் பாடலின் முழு வடிவம்:
யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றாலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.
சரி இனி தமிழருவி மணியனை செவிமடுப்போம்.
தள்ளாட்டம் இல்லாத தமிழுக்குச் சொந்தக்காரா் தமிழருவி மணியன் அவா்கள். இதோ அவர் கம்பன் விழா ஒன்றில் கலந்து கொண்டு ஆற்றும் சொற்பொழிவு…
பாட்டுக்களால் கோட்டை கட்டிய கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். திரை இசைப் பாடல்களை எழுதியவா்களில் மறக்கமுடியாத ஆளுமை கொண்ட கவிஞன் கல்யாணசுந்தரம். அப்படிப்பட்ட கவிஞனுக்கு எடுக்கப்பட்ட விழாவில் கவிஞா் வைரமுத்து ஆற்றிய பேருரை!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய இணையத்தளம் இது…
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை மூன்று.
அந்த வகையில் இந்தப் பதிவில் பாரதியின் குயில் பாட்டைப் பற்றி புலவா் கீரன் அவா்கள் நிகழ்த்தும் உரையை இணைக்கிறேன்.
பகுதி 1 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பகுதி 2 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
குயில் பாட்டு மின்னூல் |
“எப்போ வருவாரோ” என்ற தொடா் சொற்பொழிவு வரிசையில் மாணிக்கவாசகா் (மணிவாசகா்) பற்றி சொல்வேந்தா் சுகி சிவம் அவா்கள் ஆற்றிய சொற்பொழிவு
(காணொளியை தரவேற்றிய அன்பருக்கு நன்றிகள்)
பகுதி 1 : (ஒலி வடிவம் மட்டும் – கீழே செல்க.)
பகுதி 2 : (ஒலி வடிவம் மட்டும் – கீழே செல்க.)
மேலே உள்ள காணொளிகளின் ஒலி வடிவத்தை மட்டும் தரவிறக்க விரும்பினால்…
சொல்வேந்தா் சுகி சிவம் அவா்களின் சொற்பொழிவு வரிசையில் இன்னுமொன்று இது. ஆனந்த அதிர்வுகள் என்ற தலைப்பில் சுகி சிவம் அவா்கள் ஆற்றிய சொற்பொழிவு.
பகுதி 1 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பகுதி 2 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
தாய் மூலம் பூமிக்கு வருகிறோம். பானை வனையும் குயவன் போல உடல் செய்து உடலுக்குள் உயிர் உலவவிட்டு தாய் மூலம் பூமிக்கு அனுப்புகிறார் கடவுள்! தான் எங்கும் இருக்க முடியாது என்று கருதியதால் கருணையை அன்பை காதலை தாய் மூலம் உயிர்களுக்கு ஊட்டுகிறான் ஒளி போல் தெரியும் மேனியன்!
என்றும் துறக்கமுடியாத இச்சொந்தம் ஞானிகளையும் விட்டுவிடுவதில்லை என்பதற்குப் பட்டினத்தார் சாட்சி!
ஒப்புயா்வற்ற இச்சொந்தம் பற்றி அவள் சிறப்புகள் பற்றி அன்னை தமிழை அருகழைத்து அருவியாய் சொற்கள் தாவென இறைஞ்சி, வேண்டி தாயின் மேனியெங்கும் தங்கம் என தக தகக்கும் தமிழ் கொண்டு அழகு செய்கிறார் தமிழருவி மணியன் அவா்கள்!
இது தமிழருவி மணியன் அவா்களின் அற்புதச் சொல்லாற்றலால் இழைக்கப்பட்ட பேச்சு! கேட்பீா்! தாயைக் கொண்டாடுவீா்!
தரவிறக்க இங்கே அழுத்தவும்
ஆண்டு இறுதியில் அடிக்கடி திரும்பிப் பார்க்கிறேன். உருப்படியாக எதுவும் செய்யவில்லை. வீணான நாட்களை எண்ணி விக்கி விக்கி அழுகின்றது மனது… இருந்தும் என்ன பயன்?
“சென்றதினி மீளாது மூடரே…” என்று சொல்லிக் கொண்டே பாரதி பக்கத்தில் வந்து விழி உருட்டிப் பார்க்கிறான்!
“பிறக்கின்ற ஆண்டிலாவது…” தனக்குத் தானே சமாதானம் சொல்கிறது மனது!
சரி என் புலம்பலை விடுங்க… இந்த ஆண்டில் கடைசியாக ஒரு பதிவு. “முருக தரிசனம்” என்ற தலைப்பில் சொல்வேந்தா் தரும் அருமையான சொற்பொழிவு…
பிறக்கின்ற ஆண்டு அன்பா்கள் அனைவருக்கும் இனிய ஆண்டாக மலர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி விடைபெறுகிறேன்.
தரவிறக்க இங்கே அழுத்தவும்
கவியரசு கண்ணதாசன் அவா்களின் பாடல்கள் காலத்தால் அழியாதவை! “நான் நிரந்தரமானவன், அழிவதில்லை!” என்று அவரே குறிப்பிடுவது போல என்றும் நிலைத்து நிற்பவை! அத்தகைய கவிஞனைப் பற்றி சுகி சிவம் அவா்கள் ஆற்றிய உரையை இங்கு இணைக்கிறேன்.
பகுதி 1 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பகுதி 2 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
Ramaraj Cotton கிளை திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு சுகி சிவம் அவா்கள் ஆற்றிய பயனுள்ள உரை…
தரவிறக்க இங்கே அழுத்தவும்
காஞ்சி மா சுவாமிகளின் வாழ்க்கை பற்றியும் அவா் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றியும் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் உரையின் எட்டு காணொளிக் கீற்றுக்களைக் கொண்ட தனிக் கீற்றாக மிளிர்கின்றது கீழுள்ள காணொளிக் கீற்று…
விஸ்ணுவின் அவதாரங்களிலே எனக்குப் பிடித்தது கிருஸ்ண அவதாரம். குழந்தையாய் இருந்த காலம் தொட்டு அவனின் லீலைகள் அற்புதமானவை… ரசிக்கக் கூடியவை… அந்த வகையில் இந்தச் சொற்பொழிவில் சுகி சிவம் அவா்கள் கிருஸ்ணனின் குழந்தைப் பருவத்தை அதனோடு தொடா்பான நிகழ்வுகளை தனக்கே உரிய பாணியில் உங்கள் முன் விரியச் செய்கின்றார்.
பகுதி 1 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பகுதி 2 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
வாய்க்கும் நாள் எந் நாளோ என்ற தலைப்பில் தாயுமானவா் குறித்து சுகி சிவம் அவா்கள் ஆற்றிய சொற்பொழிவு…
தரவிறக்க இங்கே அழுத்தவும்
63 நாயன்மார்களில் முக்கியமான இருவா் இயற்பகை நாயன்மாரும் சிறுதொண்டா் நாயன்மாரும் ஆவா். இவா்களின் வரலாற்றை சுகி சிவம் அவா்கள் உங்கள் கண் முன் விரியச் செய்கின்றார்.
பகுதி 1 :
பகுதி 2 :
பகுதி 3 :
பகுதி 4 :
“திருவாசகத்திற்கு உருகாதவா்
ஒரு வாசகத்திற்கும் உருகார்”
என்பதனை நினைவில் கொண்டு சுகி சிவம் அவா்களின் சொற்பொழிவினை இணைக்கிறேன்.
பகுதி 1
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பகுதி 2
தரவிறக்க இங்கே அழுத்தவும்