Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...
Showing posts with label இராமாயணம். Show all posts
Showing posts with label இராமாயணம். Show all posts

Saturday, January 4, 2014

இராமாயண பெண் கதாபாத்திரங்கள் / சுதா சேஷய்யன்

சுதா சேஷய்யன்  அவர்களின் சொற்பொழிவுகள் சிலவற்றை ஏற்கனவே இந்த வ.பூவில் இணைத்திருந்தேன். அந்த வரிசையில் இது இன்னுமொன்று.

இராமாயணத்தில் வருகின்ற பெண் கதாபாத்திரங்களை அவர்களின் குண இயல்புகளை, சொல்லாமல் விடுபட்ட விடயங்களை,  குறிப்பால் உணர்த்தப் படுகின்றவற்றை என்று பல தளங்களில் நின்று தன் நேர்த்தியான தமிழால் உரைசெய்கின்றார் சுதா சேஷய்யன் அவர்கள்.

கேளுங்கள்… இன்புறுங்கள்…

ஒலித் தரம் அவ்வளவு நன்றாக இல்லாவிட்டாலும் கேட்கும் இன்பத்தை நிச்சயமாக பாதிக்காது. இதனை  ஆரம்பத்தில் பதிவேற்றிய அன்பர் முரளி அவர்களுக்கு நன்றி.

ஒலிக் கீற்றினை தரவிறக்க  இங்கே அழுத்துங்கள்.

Saturday, January 26, 2013

பால காண்டம்– இ.ஜெயராஜ் (கம்பவாரிதி)

வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை தமிழில், தமிழ் மரபுக்கு ஏற்ற வண்ணம் பாடி கம்பராமாயணம் என்று தமிழ் உலகு கொண்டாடும் வழி செய்தவன் கம்பன். வால்மீகி இராமாயணத்தை கிளிப் பிள்ளை போல் அப்படியோ ஒப்பித்திருக்கிறேன் என்று சொல்லி விட்டு புதுமைகள் பல செய்திருப்பான்.

imageஅந்த கம்பராமாயணத்தில் ஆறு காண்டங்கள் உண்டு. அதில் முதலாவது வரக்கூடிய பால காண்டத்தைப் பற்றி இலங்கையில் தமிழர்களிடம் நன்கு அறியப்பட்ட (தமிழகத்திலும்…) “கம்பவாரிதி” என்று அழைக்கப்படுகின்ற இ.ஜெயராஜ் அவர்கள் கொழும்பு தமிழ் சங்கத்தில் ஆற்றிய சொற்பொழிவு இணையத்தில் காணக்கிடைத்தது.

நல்ல யாழ்பாணத் தமிழில் சொற்பொழிவை கேட்டு இன்புற விரும்பும் அன்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

எட்டு காணொளிக் கீற்றுக்களின் கொத்தாக இதனை இணைக்கிறேன்.

நேரடியாக கீற்றுகளின் திரட்டுக்குச் செல்ல இங்கே அழுத்துங்கள்.

Sunday, May 30, 2010

அனுமான் பெருமை – சுகி சிவம்

“சொல்லின் செல்வன்” என்று இராமனால் புகழப்பட்ட ஒப்பற்ற பாத்திரப் படைப்பாக அனுமான் விளங்குகின்றான். வாயு குமாரானான அனுமான் பெருமைகளை நயம்படச் சொல்ல வருகிறார் சுகி சிவம் அவா்கள்.

Thursday, February 11, 2010

இராமாயணம் – சுகி சிவம்

நீண்ட நாளாக தேடிக் கொண்டிருந்த ஒன்று, சுகி சிவம் அவா்களின் இராமாயணச் சொற்பொழிவு.

இந்தக் காதை குறித்துப் பலரது சொற்பொழிவுகளை இணைத்திருந்தாலும் வேறு ஒரு ரசனைத் தளத்தில் நின்று கொண்டு, கம்பனையும் அவன் கையாண்ட நயத்தையும் தன் சிந்தனை கலந்து சுகி சிவம் அவா்கள் வழங்குவதால் இது வெகு வித்தியாசமான அனுபவம்! உங்களுக்கும் அது விருந்தாகட்டும்!

பகுதி 1:

ஏனைய பகுதிகளுக்கு:

Friday, January 1, 2010

பரதன்

பரதன், இராமயணத் தம்பியரில் சிறந்தவன். தேடி வந்த இராச்சியத்தை தூசி போல உதறியவன். “நிறை குணத்தவன்; நின்னிலும் நல்லன்” என்று கோசலையால் இராமனிடம் புகழப்பட்டவன்.

இந்த ஒலிக் கீற்றுக்கள் புலவா் கீரன் அவா்களால் பரதன் குறித்து ஆற்றிய சொற்பொழிவைத் தாங்கி வருகின்றன.

பகுதி 1:

 பகுதி 2:

Monday, November 9, 2009

கம்பனின் கன்னித் தமிழ்! – சுகி சிவம்

‘சொல் வேந்தா்’ சுகி சிவம் அவா்கள் கம்பனின் கன்னித் தமிழினிமை பற்றியும் இராமயணச் சிறப்புக்கள் பற்றியும் ஆற்றிய உரை…

இவ் காணொளிக் கீற்றானது நான்கு ஒளிக் கீற்றுக்களை உள்ளடக்கியது.

 

நேரடியாக காணொளிக் கீற்றைக் கண்டு, கேட்டு மகிழ - இங்கே அழுத்தவும்

Monday, August 10, 2009

கம்பன் என் காதலன்!

“ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
பூசை முற்றவு நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக்
காசில் கொற்றத் திராமன் கதையரோ”

[பொருள் : ஓசையால் உயர்ந்த பாற்கடல் போய் ஒரு பூனை பாற்கடல் முழுமையும் குடுக்க முயல்வது எவ்வளவு அறியாமையோ… அதே போன்றது குற்றமற்ற இராம சரிதத்தை அடியேன் ஆசை கொண்டு பாட முயல்கின்ற செயலும்.]

மேலே உள்ள பாடல் கம்பனின் அவையடக்கப் பாடல்களில் ஒன்று. இப்படி அவையடக்கம் பேசிய கம்பன் இராமாயணம் முழுமையும் வம்பாக செய்தவை ரசிக்கத் தக்கவை.

இவ்வளவும் எதற்காக நீ எழுதுகின்றாய் என்று யாராவது கேள்வி கேட்டால் நான் சொல்லக் கூடிய பதில் எனக்குத் தெரிந்ததை சொல்வதற்கு வேறு இடம் கிடைக்கவில்லை என்பதே! (அட பாவி…!)

சரி அஃதிருக்க  கீழே நீங்கள் காணும் காணொளி திரை உலக மார்க்கண்டேயர் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் சிவகுமார் அவர்களின் ஆழந்த இலக்கியப் புலமையைச் செப்பக்கூடிய ஒன்றாகும்.

 

(குறிப்பு : மேலே உள்ள காணொளியை முழுவதுமாக கண்டுகளிக்க/தரவிறக்க Veoh Web Player ஐ தரவிறக்கவேண்டி ஏற்படலாம்.)

 

Thursday, March 19, 2009

சுகி சிவம் - இராமயணக் காட்சிகள்

சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின் காணொளிக் கீற்றுக்கள்... இராமாயணத்தில் ரசிக்கக்கூடிய பகுதிகளை தொட்டுச் செல்கின்றன இந்த ஒளிக் கீற்றுக்கள்...

  • அட கறுப்பில் இத்தனை விசயம் இருக்கா?

  • சீதையின் நடையும் சூர்பனகையின் நடையும் (அருமையான சந்தம் தான்)

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்