நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,
ஐ கிளிக் செய்யுங்கள்.
இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.
விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
இது நவராத்திரி காலம். இதற்கமைய இந்தச் சொற்பொழிவை அதன் பொருத்தப்பாடு கருதி இணைக்கிறேன். “சொல்வேந்தர்” சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு வரிசையில் இதுவும் ஒன்று. “நவராத்திரி நாயகி” என்ற பொருளில் ஆன இந்தச் சொற்பொழிவு உங்கள் நவராத்திரி காலத்தில் கேட்க இனிய ஒன்றாக அமையும் என்று நம்புகிறேன்.
திரை இசைப் பாடல்களை பாமரனும் ரசிக்கும் வண்ணம் தமிழை எளிமைப் படுத்தியவன் கண்ணதாசன். என்றும் நின்று இசைக்கும் பாடல்களை தமிழ் திரை உலகிற்கு தந்த மகா கவிஞன். இவனை திரை இசைப் பாடல்களின் மூலமாக மட்டும் தரிசிக்கும் பலருக்கு கவிஞரின் கவிதைகள் மற்றும் இன்ன பிற தகவல்களை தரமான தமிழால் எடுத்துக் காட்டுகிறார் இங்கே தமிழருவி மணியன் அவர்கள்.
தமிழருவி மணியன் அவர்கள் விவேகானந்தர் தொடர்பாக அவர் விழா ஒன்றில் நிகழ்த்திய சொற்பொழிவு இது. பல்வேறு கருத்துக்களை சிந்திக்கும் வகையில் எம் செவிக்கும் சிந்தைக்கும் விருந்தாக்குகின்றார் மணியன் அவர்கள்.
காணொளிகளின் திரட்டு
இணையத்தில் தரவேற்றிய அன்பர் செங்கோட்டையனுக்கு (வழமை போல) நன்றிகள் பல.
மகாபாரதத்தில் முக்கியமான ஒரு பாத்திரம் பீஷ்மர். தேவவிரதன் எனும் நாமம் கொண்ட இவர், கடுமையான சபதம் மேற்கொண்டமையால் “பீஷ்மர்” என்று அழைக்கப்பட்டார். பீஷ்மர் குறித்து “அற்புதச் செயலோன்” என்ற தலைப்பில், வாசுகி மனோகரன் அவர்கள் ஆற்றும் இந்த அருமையான சொற்பொழிவு பல நல்ல சிந்தனைகளையும் கூடவே விதைத்துச் செல்கிறது.
காணொளிகளின் திரட்டு
இணையத்தில் தரவேற்றிய அன்பர் செங்கோட்டையனுக்கு நன்றிகள் பல.
ஒளவையார் என்று சொல்லும் போது நமக்குள் விரிகின்ற தோற்றம் கூன் விழுந்த ஒரு கிழவி… ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்றவற்றை நமக்கு தந்த தமிழ் கிழவி… என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு மட்டுமே பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் அண்மையில் இணையத்தில் நான் கேட்ட சாரதா நம்பி ஆரூரன் அவர்களின் இந்த உரையின் வாயிலாக பல அரிய பெரிய தகவல்களை அறிந்து கொண்டேன். வேறு எவருக்கேனும் ஔவையார் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் இருப்பின் அவர்களுக்கு இந்தப் பதிவு உதவும் என்று நம்புகிறேன்.
“பாரதி கண்ட வழியில் பாரதம் திட்டமிட்டு முன்னேறுகிறது அல்லது திசைமாறிப் போகிறது” என்ற தலைப்பில் அமைந்த பட்டிமன்றம். பாரதி விழாவில் இடம்பெற்ற இந்தப் பட்டிமன்றத்திற்கு சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் தலைமை ஏற்க விவாதம் நடக்கிறது. இணையத்தில் தரவேற்றிய அன்பர் செங்கோட்டையனுக்கு என் நன்றிகள்.
ஒன்பது காணொளிக் கற்றைகளின் தொகுப்பாக அமைந்த காணொளித் திரட்டு இது.
“எங்கே போகிறோம் நாம்?” இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கின்றோம். இந்தக் கேள்வியைத் தலைப்பாக்கி சிந்தனை முத்துக்களை விதைக்க வருகின்றார் தமிழருவி மணியன்! கேளுங்கள்… சிந்தனைப் பூக்களை மனதோரம் மலர விடுங்கள்…!
வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை தமிழில், தமிழ் மரபுக்கு ஏற்ற வண்ணம் பாடி கம்பராமாயணம் என்று தமிழ் உலகு கொண்டாடும் வழி செய்தவன் கம்பன். வால்மீகி இராமாயணத்தை கிளிப் பிள்ளை போல் அப்படியோ ஒப்பித்திருக்கிறேன் என்று சொல்லி விட்டு புதுமைகள் பல செய்திருப்பான்.
அந்த கம்பராமாயணத்தில் ஆறு காண்டங்கள் உண்டு. அதில் முதலாவது வரக்கூடிய பால காண்டத்தைப் பற்றி இலங்கையில் தமிழர்களிடம் நன்கு அறியப்பட்ட (தமிழகத்திலும்…) “கம்பவாரிதி” என்று அழைக்கப்படுகின்ற இ.ஜெயராஜ் அவர்கள் கொழும்பு தமிழ் சங்கத்தில் ஆற்றிய சொற்பொழிவு இணையத்தில் காணக்கிடைத்தது.
நல்ல யாழ்பாணத் தமிழில் சொற்பொழிவை கேட்டு இன்புற விரும்பும் அன்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
எட்டு காணொளிக் கீற்றுக்களின் கொத்தாக இதனை இணைக்கிறேன்.
“நல்லது செய்வோம்” இந்த ஆண்டிலாவது என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் எழுவதாக! 2013 உங்கள் வாழ்வில் நலன்கள் பல கொணர்ந்து உயரங்களை தொடவேண்டும் என்று உள்ளன்போடு வாழ்த்துகின்றேன்!
பஞ்சாமிர்தம் சுதா சேஷய்யன் அவர்களின் சில சொற்பொழிவுகளை ஏற்கனவே தந்திருக்கிறது. அந்த வகையில் அவரின் சொற்பொழிவொன்றை தாங்கி வருகிறது இந்த இனிய நாளில். இந்தச் சொற்பொழிவை ஏற்கனவே இணையத்தில் தரவேற்றிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி!