Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Tuesday, December 11, 2012

தன்னைத் தான் வெற்றி கொள்ளுதல் – சுகி சிவம்!

200வது பதிவு இது. இணையத்தில் உலா வருகையில் நான் பார்த்துக் கேட்டுச் சுவைத்ததை பலரும் சுவைத்து இன்புறும் வண்ணம் பதிவிட்டு வந்திருக்கிறேன். இதற்காக என்னை பாராட்ட வேண்டிய அவசியம் எதுவுமில்லை. ஆரம்பத்தில் ஒலி, ஒளிக் கீற்றுக்களை பதிவேற்றிய நல்ல உள்ளங்களை நினைத்துப் பார்த்தால் போதுமானது. வேறு என்ன… சரி இன்றைய பகிர்தலைப் பார்ப்போம்.

சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின்  சொற்பொழிவுகளை பலமுறை பதிவிட்டு வந்துள்ளேன். அந்த வரிசையில் இந்த 200வது பதிவு அவரின் சொற்பொழிவு ஒன்றைத் தாங்கி வருகிறது. கேட்டுப் பயன்பெறுங்கள்.

ஒரு சின்ன வேண்டுகோள் முகப் புத்தகத்தில் பஞ்சாமிர்த்திற்கான பிரத்தியேக பக்கத்தில் உங்கள் விருப்பை (Like) தெரிவியுங்கள்.

சொற்பொழிவுக்கான காணொளி இணைப்பு

ஒலிக் கீற்றினை மட்டும் தரவிறக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.

Sunday, November 11, 2012

ஆனந்தமாக வாழுங்கள்!–சுகி சிவம்

சொல்லவே தேவையில்லை இவரைப் பற்றி. சொல் வேந்தரின் அற்புதமான உரை வரிசையில் இன்னுமொன்று…

தரவிறக்க இங்கே அழுத்துங்கள்

Sunday, October 21, 2012

சிந்திப்போம் - நெல்லைக்கண்ணன்

நக்கல் பேச்சின் ஊடாக சிந்தனை விதைகளை தூவுவதில் வல்லவா் நெல்லைக்கண்ணன் அவா்கள். அவா் பேச்சுக்கள் பலவற்றை ஏற்கனவே உங்கள் செவிகளுக்கு உணவாக பஞ்சாமிர்தத்தில் தந்திருக்கிறேன். அந்த வகையில் அவரின் இன்னுமொரு பேச்சு இது. என்ன கேட்போமா?

 

காணொளிகளின் திரட்டு கீழே…

 

ஒலிக் கீற்று

தரவிறக்க விரும்பினால், இங்கே அழுத்தவும்

Sunday, September 30, 2012

தர்மம்–இளம்பிறை மணிமாறன்

‘தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்’ என்பான் மீசைக் கவிஞன். இளம்பிறை மணிமாறன் அவா்கள் தர்மம் குறித்து இந்தச் சொற்பொழிவின் மூலம் நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றார். கேட்டுப் பாருங்களேன்.

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Friday, August 31, 2012

ஆதித்திய கிருதயம் - சுதா சேஷய்யன்

ஆதித்திய கிருதயம் என்பது சூரியனுக்கான மந்திரமாகும். ஆதித்தியன் என்பது சூரியனைக் குறிக்கும். இராமாயணத்தில் அகத்திய முனிவா் இராமனிடம், “ஆதித்திய கிருதயத்தை கூறு புதிய சக்தியும் உற்சாகமும் கிடைக்கும்” என்று சொல்ல அவ்வாறு இராமனும் கூறி களைப்பு நீங்கி, இராவணனுடன் போர் புரிந்தார்.

அத்தகைய ஆதித்திய கிருதயம் பற்றி சுதா சேஷய்யன் அவா்கள் ஆற்றுகின்ற உரை இது.

இதன் ஒலி வடிவை மட்டும் தரவிறக்க இங்கே அழுத்தவும்

Sunday, August 12, 2012

லலிதா சஹஸ்ரநாமம்–சுகி சிவம்

லலிதா சஹஸ்ரநாமம் பற்றி சொல் வேந்தா் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு இது…

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Tuesday, July 3, 2012

யாதும் ஊரே யாவரும் கேளிர் – தமிழரு மணியன்!

சங்கத் தமிழன் “யாதும் ஊரே யாவரும் கேளிர்…” என்று உலக ஒருமையைப் பற்றி என்றைக்கோ சிந்தித்து விட்டான். கணியன் பூங்குன்றனார் என்ற அந்தப் புலவனின் சிந்தனை விசாலமானது. தொடர்ந்து வரும் வரிகளைப் பாருங்கள். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” எத்தனை உயா்ந்த உண்மை!

தமிழருவி மணியன் அவா்கள், யாதும் ஊரே யாவரும் கேளிர்… என்ற வரிகளோடு சிந்திக்கும் வகையில் ஆற்றும் உரை இது…

முதலில் அந்தப் பாடலின் முழு வடிவம்:

யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றாலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.

சரி இனி தமிழருவி மணியனை செவிமடுப்போம்.

Sunday, May 27, 2012

உயிர் விடும் மூச்சு…–கவிஞா் அறிவுமதி!

ஒரு தாயின் பனிக் குடத்தில் நீந்திக் கொண்டிருக்கும் பெண் குழந்தை ஒன்று பேசுவதாக அமைந்த கவிஞர் அறிவுமதியின் கவி வரிகள் இசையோடு கை கோர்த்து கவிஞரின் குரலில் நடை பயில்கின்றது.

Thursday, May 24, 2012

குருவும் திருவும் – சுகி சிவம்

சுகி சிவம் ஆற்றும் சொற்பொழிவு ஒன்று காணொளி வடிவில் காணக் கிடைத்தது. பகவான் இராமகிருஷ்ணா் அவா்களின் குருவருள் பற்றி சொற்பொழிவு தொட்டுச் செல்கின்றது. அவ் காணொளிக் கீற்றுக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

காணொளிக் கீற்றுக்களை நேரடியாக பார்வையிட…

Friday, April 27, 2012

சுவாமியே சரணம்!–சுகி சிவம்

சொல்வேந்தா் சுகி சிவம் அவா்களின் சொற்பொழிவு வரிசையில் இன்னுமொன்று…

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Thursday, April 19, 2012

அ–குறும்படம்

நெஞ்சைத் தொட்ட குறும்படங்களை அவ்வப்போது பஞ்சாமிர்தத்தில் பகிர்ந்து வந்துள்ளேன். அந்த வகையில் இன்னுமொரு குறும்படம்…

Friday, April 6, 2012

கம்பனில் பண்பாடு–தமிழருவி மணியன்

தள்ளாட்டம் இல்லாத தமிழுக்குச்  சொந்தக்காரா் தமிழருவி மணியன் அவா்கள். இதோ அவர் கம்பன் விழா ஒன்றில் கலந்து கொண்டு ஆற்றும் சொற்பொழிவு…

Saturday, March 31, 2012

வலம்புரியின் வற்றாத தமிழ்!

சிகரங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு “வார்த்தைச் சித்தர்” வலம்புரி ஜோன் அவா்கள் ஆற்றிய உரை…

Saturday, March 10, 2012

மெஞ்ஞானமும் விஞ்ஞானமும்–D.A. யோசப்

மெஞ்ஞானமும் விஞ்ஞானமும் என்ற தலைப்பில் D.A.யோசப் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு…

பகுதி 1:

தரவிறக்க இங்கே அழுத்தவும்

பகுதி 2:

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Saturday, February 25, 2012

பாரதிதாசன் பற்றி சுப.வீ!

புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் பற்றி சுப.வீரபாண்டியன் அவா்கள் ஆற்றும் ஒரு உரை…

Saturday, January 21, 2012

மகிழ்ச்சி திருமணத்திற்குப் பின்…–சுகி சிவம்!

சுகி சிவம் அவா்கள் நடுவராக கலந்து சிறப்பிக்கும் பட்டிமன்றம் ஒன்று இணையத்தில் காணக் கிடைத்தது. “மகிழ்ச்சி திருமணத்திற்குப் பின்…” என்ற தலைப்பில் அமைந்தது இந்தப் பட்டிமன்றம். கேட்டுப் பாருங்களேன்… (ஆரம்பத்தில் தரவேற்றிய அன்பருக்கு நன்றிகள்!)

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Sunday, January 1, 2012

நீங்கள் அசைவ உணவுப் பிரியரா…?

வணக்கம் பஞ்சாமிர்த அன்பா்களே…

உங்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! எல்லா வித சிறப்பும் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துகின்றேன்.

சரி இப்ப விசயத்திற்கு வருவோம். 2012 இன் முதல் பதிவு இது. கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கட்டும் என்று (அப்ப நீ இவ்வளவு நாளும் போட்டது? ;-~)) சைவ உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்களைச் சொல்லும் சொற்பொழிவு இது.

D.A.JosephD.A.யோசப் அவா்கள் ஆற்றுகின்ற சொற்பொழிவு இது…

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்