Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...
Showing posts with label கண்ணதாசன். Show all posts
Showing posts with label கண்ணதாசன். Show all posts

Sunday, September 15, 2013

காவியத் தாயின் இளைய மகன் / தமிழருவி!

image

திரை இசைப் பாடல்களை பாமரனும் ரசிக்கும் வண்ணம் தமிழை எளிமைப் படுத்தியவன் கண்ணதாசன். என்றும் நின்று இசைக்கும் பாடல்களை தமிழ் திரை உலகிற்கு தந்த மகா கவிஞன். இவனை திரை இசைப் பாடல்களின் மூலமாக மட்டும் தரிசிக்கும் பலருக்கு கவிஞரின் கவிதைகள் மற்றும் இன்ன பிற தகவல்களை தரமான தமிழால் எடுத்துக் காட்டுகிறார் இங்கே தமிழருவி மணியன் அவர்கள்.

காணொளிகளின் திரட்டு

காணொளிக் கீற்றுக்களின் திரட்டிற்கு செல்ல இங்கே அழுத்துங்கள்.

ஒலிக் கீற்றினை மட்டும் தரவிறக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.

Friday, December 10, 2010

கவியரசு கண்ணதாசன் – சுகி சிவம்!

கவியரசு கண்ணதாசன் அவா்களின் பாடல்கள் காலத்தால் அழியாதவை! “நான் நிரந்தரமானவன், அழிவதில்லை!” என்று அவரே குறிப்பிடுவது போல என்றும் நிலைத்து நிற்பவை! அத்தகைய கவிஞனைப் பற்றி சுகி சிவம் அவா்கள் ஆற்றிய உரையை இங்கு இணைக்கிறேன்.

பகுதி 1 :

தரவிறக்க இங்கே அழுத்தவும்

பகுதி 2 :

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Monday, July 26, 2010

பட்டுக்கோட்டையா கண்ணதாசனா?

“சமூக நலக் கருத்துக்களை அதிகம் வலியுறுத்திப் பாடியது பட்டுக்கோட்டையா கண்ணதாசனா?”

என்ற கருப்பொருளில் பட்டிமன்றம். தலைமை தாங்குபவா் திண்டுக்கல் ஐ.லியோனி அவா்கள்.

பகுதி 1

பகுதி 2

Saturday, June 12, 2010

இலக்கியத்தில் காதல்!

கண்ணதாசன் அவா்களின் அரிய பேச்சின் ஒலிக் கீற்றுக்கள் இவை. இன்னும் அதிகம் பேசி இருக்கக்கூடாதா என்று ஏங்க வைக்கும் சரளமான வார்த்தைகளின் அணிவகுப்பு… நயமான கருத்துக்கள்… மெல்லிய நகைச்சுவை… அட…டா…அற்புதம்…!

பகுதி 1:

பகுதி 2:

Sunday, November 1, 2009

கண்ணதாசன் கவிதைகள்

தமிழருவி மணியன் அவர்கள் அவருக்கே உரிய அழகிய நடையில் கண்ணதாசனின் கவிதைகள் என்ற பொருளில் ஆற்றுகின்ற உரை…

Powered by eSnips.com

Monday, June 29, 2009

கண்ணதாசனோடு எனது தோழமை – கலைஞர்

கலைஞர் கருணாநிதி அவர்கள் கண்ணதாசனோடு கொண்ட தோழமை குறித்து கண்ணதாசனின் பிறந்த தினம் ஒன்றில் ஆற்றிய உரையின் தொகுப்பு…

 

மேலே உள்ள காணொளி எட்டு ஒலி/ஒளிக் கீற்றுக்களைக் கொண்ட தனிக் கீற்றாக அமைகிறது.

நேரடியாக ஒவ்வொரு கீற்றுக்களையும் பார்வையிட/கேட்க : இங்கே அழுத்தவும்

நன்றி : sivajitv

Wednesday, March 4, 2009

இளையராஜாவின் முதல் மேடை இசை...

பாரதப் பிரதமர் நேரு அவர்கள் இறந்தபோது கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஒரு அஞ்சலிக் கவிதை எழுதியிருந்தார். அந்தக் கவிதைக்கு இசையமைத்தது தான் தனது முதல் பாடல் இசையமைப்பு என்று சொல்லும் இயையராஜா அவர்கள் தனது குரலில் அதனைப் பாடுகின்றார்...

கவியரசு கண்ணதாசனின் கவி வரிகளைப்(நேரு மறைவின் போது எழுதியதை) படிக்க சிலருக்கு ஆர்வமாக இருக்கலாம்...

சீரிய நெற்றி எங்கே

சிவந்தநல் இதழ்கள் எங்கே

கூரிய விழிகள் எங்கே

குறுநகை போன தெங்கே

நேரிய பார்வை எங்கே

நிமிர்ந்தநன் நடைதா னெங்கே?

நிலமெலாம் வணங்கும் தோற்றம்

நெருப்பினில் வீழ்ந்த திங்கே!

அம்மம்மா என்ன சொல்வேன்

அண்ணலைத் தீயிலிட்டார்

அன்னையைத் தீயிலிட்டார்

பிள்ளையைத் தீயிலிட்டார்

தீயவை நினையா நெஞ்சைத்

தீயிலே எரியவிட்டார்

தீயசொல் சொல்லா வாயைத்

தீயிலே கருகவிட்டார்!

 

வேறு

 

பச்சைக் குழந்தை

பாலுக்குத் தவித்திருக்க

பெற்றவளை அந்தப்

பெருமான்அழைத்துவிட்டான்

வானத்தில் வல்லூறு

வட்டமிடும் வேளையிலே

சேங்க்கிளியைக் கலங்கவிட்டுத்

தாய்க்கிளிளைக் கொன்றுவிட்டான்

சாவே உனக்குகொருநாள்

சாவுவந்து சேராதோ!

சஞ்சலமே நீயுமொரு

சஞ்சலத்தைக் காணாயே!

தீயே உனக்கொருநாள்

தீமூட்டிப் பாரோமோ!

தெய்வமே உன்னையும்நாம்

தேம்பி அழ வையோமோ!

யாரிடத்துப் போயுரைப்போம்!

யார்மொழியல் அதைதிகொள்வோம்?

யார்துணையில் வாழ்ந்திருப்போம்?

யார்நிழலில் குடியிருப்போம்?

வேரோடு மரம்பறித்த

வேதனே எம்மையும் நீ

ஊரோடு கொண்டுசென்றால்

உயிர்வாதை எம்கில்லையே…

நீரோடும் கண்களுக்கு

நம்மதியை பார்தருவார்?

நேருஇல்லா பாரதத்தை

நினைவில்யார் வைத்திருப்பார்?

ஐயையோ! காலமே!

ஆண்டவனே! எங்கள்துயர்

ஆறாதே ஆறாதே

அழுதாலும் தீராதே!

கைகொடுத்த நாயகனைக்

கண்மூட வைத்தாயே

கண்கொடுத்த காவலனைக்

கண்மூட வைத்தாயே

கண்டதெல்லாம் உண்மையா

கேட்டதெல்லாம் நிஜம்தானா

கனவா கதையா

கற்பனையா அம்மம்மா…

நேருவா மறைந்தார்; இல்லை!

நேர்மைக்குச் சாவே இல்லை!

அழிவில்லை முடிவுமில்லை

அன்புக்கு மரணம் இல்லை!

இருக்கின்றார் நேரு

இங்கேதான் இங்கேதான்

எம்முயிரில், இரத்தத்தில்,

இதயத்தில், நரம்புகளில்,

கண்ணில், செவியில்,

கைத்தலத்தில் இருக்கின்றார்

எங்கள் தலைவர்

எமைவிட்டுச் செல்வதில்லை!

என்றும் அவர் பெயரை

எம்முடனே வைத்திருப்போம்

அம்மா…அம்மா…அம்மா…!

-----------------------------------------------------

நன்றி : http://rethinavelu.wordpress.com [இவரின் வ.பூவில் இருந்து பெறப்பட்டது.]

கவியரசு கண்ணதாசின் மகன் - நேர்காணல்

கவியரசர் கண்ணதாசனின் மகன், காந்தி கண்ணதாசன் தனது குடும்பப் பின்ணனி பற்றி இந்தக் காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்...  

Thursday, July 24, 2008

இசை ராஜா கவி ராஜா பற்றி...

கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் எழுதும் திறன் பற்றி தனது எண்ணங்களை பதிகிறார் இசைஞானி இளையராஜா...

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, July 10, 2008

அர்த்தமுள்ள இந்து மதம்

கவியரசு கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம்" உரைகள் வெகு பிரசித்தம். அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகவடிவில் 10 பாகங்கள் வெளிவந்துள்ளன.

அவர் குரலில் கேட்டுப் பாருங்கள்...

 

Powered by eSnips.com

 

-------------------------<<வேறு>>-----------------------------------

 

Wednesday, July 9, 2008

கம்பனும் கண்ணதாசனும் - ஒரு பார்வை

நெல்லை கண்ணன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு

Powered by eSnips.com

 

நெல்லை கண்ணன் அவர்களின் வலைப் பூ :

» http://thamizhkadal.blogspot.com/

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்