வாய் பேசும் வார்த்தைகளால் என்ன பயன்? ஆகவே எதுவும் சொல்லப் போவதில்லை…
நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,
இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.
விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
Tuesday, June 30, 2009
Monday, June 29, 2009
கண்ணதாசனோடு எனது தோழமை – கலைஞர்
கலைஞர் கருணாநிதி அவர்கள் கண்ணதாசனோடு கொண்ட தோழமை குறித்து கண்ணதாசனின் பிறந்த தினம் ஒன்றில் ஆற்றிய உரையின் தொகுப்பு…
மேலே உள்ள காணொளி எட்டு ஒலி/ஒளிக் கீற்றுக்களைக் கொண்ட தனிக் கீற்றாக அமைகிறது.
நேரடியாக ஒவ்வொரு கீற்றுக்களையும் பார்வையிட/கேட்க : இங்கே அழுத்தவும்
நன்றி : sivajitv
கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ் சாபம்!
கீழே உள்ள பதிவில் கவிஞர் தாமரை அவர்களின் நேர்காணலைத் தந்திருக்கிறேன். அந்த நேர்காணலில் இடம்பெற்ற கவிதையைப் பலரும் அவர்களின் வ.பூக்களில் தந்திருக்கிறார்கள்.
அந்தக் காலப் புலவர்கள் அறம் பாடியது போன்ற தொனியில் அமைந்தது கவிஞர் தாமரையின் இந்தக் கவிதை… (கருத்துக்களோடு) முழுமையான உடன்பாடு இல்லாவிட்டாலும் அந்தக் கவிதையின் ஒலி வடிவவை இணைக்கிறேன்.
கண்ணகி மதுரையை எரித்த போது அக்கினி பகவானிடம் குழந்தைகளை எதுவும் செய்யவேண்டாம் என்று சொன்னதாக நினைவு. (பிழையெனில் திருத்தவும்.)
அந்தக் கருத்தை எதிரொலிக்கிறது கவிஞரின் பின் குறிப்பு.
|
- கவிதையை தரவிறக்க விரும்பினால் : இங்கே அழுத்தவும்.
தாமரை – தீ உரை [நேர்காணல்]
கவிஞர் தாமரை நுட்பமான உணர்வுகளை கவிதைகளில் கொண்டு வரக்கூடிய திறமையாளர்;தமிழ் உணர்வாளர்.
அவர் கனடியத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி இது.
Saturday, June 27, 2009
சிவ உபதேசம் - வாரியார் சுவாமிகள்
இது "கந்த புராணத்தில் - சிவ உபதேசம்", திரு முருக கிருபானந்தவாரியார் அவர்களின் சொற்பொழிவு...
|
Monday, June 22, 2009
நடிகர் திலகம் சிவாஜி - நேர்காணல்
பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் சிவாஜி கணேசன் அவர்களை நேர்கண்டபோது…
Monday, June 15, 2009
கண்ணப்ப நாயனார் – சுகி சிவம்
கண்ணப்ப நாயனார் அவர்களின் வரலாறு பல பேருக்குத் தெரிந்திருக்கலாம். (அது யார் அப்பன் என்று கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். )
கண் தானத்தை உலகத்தில தொடக்கி வைச்சது கண்ணப்ப நாயனாரோ என்று கேள்வியை கேட்கவைப்பது அவர் இறைவனுக்கு தன் கண்ணைக் குற்றி எடுத்துக் கொடுத்த அளப்பெருஞ் செயல்!
“சொல் வேந்தர்” சுகி சிவம் அவர்கள் தனது வியத்தகு பேச்சாற்றலால் கண்ணப்ப நாயனாரை உங்கள் கண் முன் கொண்டு வருகின்றார். (மொத்தமாக எட்டு ஒளிக் கீற்றுகளை உள்ளடக்கிய தனிக்கீற்றாக கீழ் உள்ள காணொளி அமைகின்றது.)
Friday, June 12, 2009
அய்யா அம்மா அம்மம்மா - காணொளி
காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் “அய்யா அம்மா அம்மம்மா…” நாடகத்தின் ஒலி வடிவத்தை ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருந்தேன். இது காணொளி வடிவில்…
பகுதி 1:
பகுதி 2:
பகுதி 3:
பகுதி 4:
Wednesday, June 10, 2009
வாமன அவதாரம் – ஹைக்கூ…!
வாமன அவதாரம் எடுத்த நாராயணன் மகாபலி மன்னனிடம் மூன்றடி மண் தானம் கேட்க, குள்ளமான உருவத்துடன் வந்திருப்பது பகவான் என்று அறியாத மகாபலி மன்னன், “மூன்றடி மண் தானே… தாராளமாக எடுத்துக்கொள் என்று சொல்ல…” பகவான் விஷ்வ ரூபம் எடுத்து ஒரு அடியால் பூமியையும் மறு அடியால் ஆகாயத்தையும் அளந்து மூன்றாவது அடி எங்கே வைக்க என்று கேட்க, திகைத்த மகாபலி மன்னன் “என் தலையில் வைக்கவும்…” என்றானாம்.
மேலே உள்ள புராணக் கதையை சொல்ல வந்த காரணம் என்னவென்றால், “ஹைக்கூ” கவிதைகளும் அளவில் சிறியதாக இருந்தாலும் கருத்து ரீதியில் அவை மனதில் ஏற்படுத்தக்கூடிய சலனங்கள் மிகப் பெரியது என்ற கருத்தை முன்வைக்கத் தான். (எங்களுக்கு தெரியாதாக்கும்… )
சரி என் கருத்து இருக்கட்டும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் “ஹைக்கூ” பற்றி சொல்கின்ற கருத்தைக் கேளுங்கள். (அவரின் குரலில் அல்ல – குரல் சிறிராம்)
|