வாமன அவதாரம் எடுத்த நாராயணன் மகாபலி மன்னனிடம் மூன்றடி மண் தானம் கேட்க, குள்ளமான உருவத்துடன் வந்திருப்பது பகவான் என்று அறியாத மகாபலி மன்னன், “மூன்றடி மண் தானே… தாராளமாக எடுத்துக்கொள் என்று சொல்ல…” பகவான் விஷ்வ ரூபம் எடுத்து ஒரு அடியால் பூமியையும் மறு அடியால் ஆகாயத்தையும் அளந்து மூன்றாவது அடி எங்கே வைக்க என்று கேட்க, திகைத்த மகாபலி மன்னன் “என் தலையில் வைக்கவும்…” என்றானாம்.
மேலே உள்ள புராணக் கதையை சொல்ல வந்த காரணம் என்னவென்றால், “ஹைக்கூ” கவிதைகளும் அளவில் சிறியதாக இருந்தாலும் கருத்து ரீதியில் அவை மனதில் ஏற்படுத்தக்கூடிய சலனங்கள் மிகப் பெரியது என்ற கருத்தை முன்வைக்கத் தான். (எங்களுக்கு தெரியாதாக்கும்… )
சரி என் கருத்து இருக்கட்டும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் “ஹைக்கூ” பற்றி சொல்கின்ற கருத்தைக் கேளுங்கள். (அவரின் குரலில் அல்ல – குரல் சிறிராம்)
|
0 பின்னூட்டல்கள்:
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்