விஸ்ணுவின் அவதாரங்களில் பலராலும் விரும்பப்படும் அவதாரம் கிருஸ்ண அவதாரமாகும். கண்ணன் எப்போதும் ஆனந்தமாக இருப்பது எப்படி என்பதை வாழ்ந்து காட்டியவன். அவன் கவலைப் பட்டதாக படித்த நினைவே இல்லை. பிறக்கும் போதே சிரித்த குழந்தையாக தோன்றியவன். போர்களத்தில் அர்சுனனின் தேரோட்டியாக வந்தபோது கூட எவ்வித சஞ்சலமும் இன்றி வலம் வந்தவன்.
கண்ணனை பலவாறு கற்பனை செய்து பலரும் அனுபவித்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் புது வித அனுபவங்களைத் தருபவன் அவன்.
இப்படி அவனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
அது நிற்க, கண்ணன் வந்தான் என்ற இந்த ஒலிப் புத்தகத்தை கேளுங்கள். படிப்பது ஒரு வித சுகம் என்றால் கேட்பது இன்னொரு வகையில் சுகம்!
கண்ணை மூடி கண்ணனை உள் நினை
கவலையெல்லாம் விட்டுப்போகும் உனை!
சரி தரவிறக்கி கேட்க இங்கே அழுத்தவும்.
(தரவேற்றிய அன்பருக்கு நன்றிகள். _/\_)