Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...
Showing posts with label பாரதி(யார்). Show all posts
Showing posts with label பாரதி(யார்). Show all posts

Friday, June 20, 2014

பாரதியார் வாழ்க்கை குறிப்புக்கள்!

பாரதியார் குறித்து யார் உரையாற்றினாலும் அலுக்காமல் கேட்கலாம். காரணம் புத்துணர்ச்சி தரும் புரட்சிக் கருத்துக்கள்! இந்தப் பதிவில் சினீவாசன் அவர்கள் ஆற்றிய உரையை தருகிறேன்.

முன்பு நான் கேள்விப்படாத பல தகவல்களை இவரின் உரையினூடாகக் கேட்டு மெய்சிலிர்ப்பு ஏற்பட்டது. 

இந்த அருமையான உரையை இணையத்தில் தரவேற்றிய அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல.

ஒலிக்கீற்றை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்

Tuesday, April 23, 2013

பாரதி விழா பட்டிமன்றம்–நடுவர் சுகி சிவம்!

“பாரதி கண்ட வழியில் பாரதம் திட்டமிட்டு முன்னேறுகிறது அல்லது திசைமாறிப் போகிறது” என்ற தலைப்பில் அமைந்த பட்டிமன்றம். பாரதி விழாவில் இடம்பெற்ற இந்தப் பட்டிமன்றத்திற்கு சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் தலைமை ஏற்க விவாதம் நடக்கிறது. இணையத்தில் தரவேற்றிய அன்பர் செங்கோட்டையனுக்கு என் நன்றிகள்.

ஒன்பது காணொளிக் கற்றைகளின் தொகுப்பாக அமைந்த காணொளித் திரட்டு இது.

காணொளிக் கீற்றுகளுக்கு நேரடியாக செல்ல இங்கே அழுத்தவும்

Monday, March 21, 2011

பாரதியின் குயில் பாட்டு – புலவா் கீரன்!

imageமகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை மூன்று.

  1. கண்ணன் பாட்டு
  2. குயில் பாட்டு
  3. பாஞ்சாலி சபதம்

அந்த வகையில் இந்தப் பதிவில் பாரதியின் குயில் பாட்டைப் பற்றி புலவா் கீரன் அவா்கள் நிகழ்த்தும் உரையை  இணைக்கிறேன்.

பகுதி 1 :

தரவிறக்க இங்கே அழுத்தவும்

பகுதி 2 :

தரவிறக்க இங்கே அழுத்தவும்

குயில் பாட்டு மின்னூல்

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Tuesday, December 7, 2010

பாரதி நிகழ்வில் நெல்லைக்கண்ணன்!

வற்றாத தமிழ், வளமான தமிழ், நாவில் நின்று நடமாடும் நையாண்டித் தமிழ் என இவைகளுக்குச் சொந்தக்காரா் ‘தமிழ்க்கடல்’ நெல்லைக்கண்ணன் அவா்கள்! இதோ பாரதிக்கு சிலை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டு நெல்லைக்கண்ணன் அவா்கள் ஆற்றிய சொற்பொழிவு…


உரையின் ஒலி வடிவத்தை தரவிறக்க விரும்புபவா்கள் இங்கே அழுத்தவும்

Wednesday, July 7, 2010

அச்சம் தவிர் – சுகி சிவம்!

“அச்சம் தவிர்” பாரதியின் ஆண்மை ததும்பிய ஆத்தி சூடியின் ஆரம்ப வரி! அந்த ஆரம்ப வரியையே தன் பேச்சின் தலைப்பாகக் கொண்டு உரையாற்றுகிறார் சொல்லின் செல்வா் சுகி சிவம் அவா்கள்.

Friday, June 18, 2010

பாரதியும் பாரதிதாசனும்…

கவிக்கோ அப்துல் ரகுமான் அவா்களின் கவிதைகள் போலவே பேச்சுக்களும் அருமை!அந்த வகையில் பாரதியையும் அவன் வழி வந்த பாரதிதாசனையும் ஒப்பு நோக்குகிறார் கவிஞா்.

Sunday, December 20, 2009

பாரதியும் மேல் நாட்டுக் கவிஞா்களும்!

தமிழின் தனி அடையாளமாகிப் போய்விட்ட உன்னத கவிஞன் மகாகவி பாரதி. எழுத்தும் செயலும் சமாந்தரமாகப் பயணிக்காமல் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரே நோ்கோட்டில் பயணிக்கச் செய்தவன் இந்த மீசைக் கவி!
 
பாரதியின் 127வது பிறந்த தின நிகழ்வை முன்னிட்டு மேலைநாட்டு கவிஞா்களுடன் பாரதியை ஒப்பு நோக்கும் காணொளி இது. 
 

 

இது தொடா்பான விரிவான விபரங்களைக் காண இங்கே அழுத்தவும்.

Monday, July 13, 2009

பயணங்கள் முடிவதில்லை…!

“சொல் புதிது
பொருள் புதிது
சுவை புதிது…”

என்றிங்ஙனம் தன் தமிழை இறுமாந்து சொன்னவன் பாரதி.

கம்பீரமான தமிழுக்கு மட்டுமல்ல தோற்றத்திற்கும் சொந்தக்காரன்.

அந்த மீசைக் கவியை தன் அழகு தமிழால் தாலாட்டுகிறார் சொல் வேந்தர் சுகி சிவம் அவர்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

 

» தரவிறக்கம்

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்