Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Thursday, December 30, 2010

முருக தரிசனம் – சுகி சிவம்!

ஆண்டு இறுதியில் அடிக்கடி திரும்பிப் பார்க்கிறேன். உருப்படியாக எதுவும் செய்யவில்லை. வீணான நாட்களை எண்ணி விக்கி விக்கி அழுகின்றது மனது… இருந்தும் என்ன பயன்?

“சென்றதினி மீளாது மூடரே…” என்று சொல்லிக் கொண்டே பாரதி பக்கத்தில் வந்து விழி உருட்டிப் பார்க்கிறான்!

“பிறக்கின்ற ஆண்டிலாவது…” தனக்குத் தானே சமாதானம் சொல்கிறது மனது!

சரி என் புலம்பலை விடுங்க… இந்த ஆண்டில் கடைசியாக ஒரு பதிவு. “முருக தரிசனம்” என்ற தலைப்பில் சொல்வேந்தா் தரும் அருமையான சொற்பொழிவு…

பிறக்கின்ற ஆண்டு அன்பா்கள் அனைவருக்கும் இனிய ஆண்டாக மலர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி விடைபெறுகிறேன்.

புது வருட வாழ்த்துக்கள்

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Friday, December 10, 2010

கவியரசு கண்ணதாசன் – சுகி சிவம்!

கவியரசு கண்ணதாசன் அவா்களின் பாடல்கள் காலத்தால் அழியாதவை! “நான் நிரந்தரமானவன், அழிவதில்லை!” என்று அவரே குறிப்பிடுவது போல என்றும் நிலைத்து நிற்பவை! அத்தகைய கவிஞனைப் பற்றி சுகி சிவம் அவா்கள் ஆற்றிய உரையை இங்கு இணைக்கிறேன்.

பகுதி 1 :

தரவிறக்க இங்கே அழுத்தவும்

பகுதி 2 :

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Tuesday, December 7, 2010

பாரதி நிகழ்வில் நெல்லைக்கண்ணன்!

வற்றாத தமிழ், வளமான தமிழ், நாவில் நின்று நடமாடும் நையாண்டித் தமிழ் என இவைகளுக்குச் சொந்தக்காரா் ‘தமிழ்க்கடல்’ நெல்லைக்கண்ணன் அவா்கள்! இதோ பாரதிக்கு சிலை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டு நெல்லைக்கண்ணன் அவா்கள் ஆற்றிய சொற்பொழிவு…


உரையின் ஒலி வடிவத்தை தரவிறக்க விரும்புபவா்கள் இங்கே அழுத்தவும்

Saturday, December 4, 2010

Ramaraj Cotton இல் சுகி சிவம்!

Ramaraj Cotton கிளை திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு சுகி சிவம் அவா்கள் ஆற்றிய பயனுள்ள உரை…

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Saturday, November 27, 2010

காஞ்சி மா முனிவா் – சுகி சிவம்!

காஞ்சி மா சுவாமிகளின் வாழ்க்கை பற்றியும் அவா் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றியும் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் உரையின் எட்டு காணொளிக் கீற்றுக்களைக் கொண்ட தனிக் கீற்றாக மிளிர்கின்றது கீழுள்ள காணொளிக் கீற்று…

Sunday, November 21, 2010

கண்ணன் கேள்விப்பட்டிராத குழந்தை!

விஸ்ணுவின் அவதாரங்களிலே எனக்குப் பிடித்தது கிருஸ்ண அவதாரம். குழந்தையாய் இருந்த காலம் தொட்டு அவனின் லீலைகள் அற்புதமானவை… ரசிக்கக் கூடியவை… அந்த வகையில் இந்தச் சொற்பொழிவில் சுகி சிவம் அவா்கள் கிருஸ்ணனின் குழந்தைப் பருவத்தை அதனோடு தொடா்பான நிகழ்வுகளை தனக்கே உரிய பாணியில் உங்கள் முன் விரியச் செய்கின்றார்.

பகுதி 1 :

தரவிறக்க இங்கே அழுத்தவும்

பகுதி 2 :

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Friday, November 19, 2010

வாய்க்கும் நாள் எந் நாளோ?

வாய்க்கும் நாள் எந் நாளோ என்ற தலைப்பில் தாயுமானவா் குறித்து சுகி சிவம் அவா்கள் ஆற்றிய சொற்பொழிவு…

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Monday, November 8, 2010

ரிஸ்க் எடு தலைவா!

Tamil-Self-Development-Take-Risk-Audio-Book

இணையத்தில் உலா வந்தபோது காணக்கிடைத்த இன்னுமொரு ஒலிப் புத்தகம் இது…

ரிஸ்க் எடு தலைவா!

Thursday, November 4, 2010

தீபாவளி வாழ்த்துக்கள்!

அன்பா்கள் நண்பா்களுக்கு என் இனிய தீப ஒளி வாழ்த்துக்கள்…

deepawali_new[1]

Monday, November 1, 2010

சவாலே சமாளி!

cover
S.L.V. மூா்த்தி எழுதிய “சவாலே சமாளி” ஒலிப் புத்தகம் சுந்தரராமனின் குரலில்…

Monday, October 25, 2010

இயற்பகையும் சிறுதொண்டரும்!

63 நாயன்மார்களில் முக்கியமான இருவா் இயற்பகை நாயன்மாரும் சிறுதொண்டா் நாயன்மாரும் ஆவா். இவா்களின் வரலாற்றை சுகி சிவம் அவா்கள் உங்கள் கண் முன் விரியச் செய்கின்றார்.

பகுதி 1 :

பகுதி 2 :

பகுதி 3 :

பகுதி 4 :

Thursday, October 7, 2010

இட்லியாய் இருங்கள்! – III & IV

சோம வள்ளியப்பனின் ஒலிப் புத்தகம் சுந்தரராமனின் குரலில்…

அத்தியாயம் 3:

தரவிறக்க…

அத்தியாயம் 4:

தரவிறக்க…

 

ஏனைய அத்தியாயங்கள் யாரிடமேனும் இருந்தால் தந்துதவுங்கள்.

Saturday, September 25, 2010

இட்லியாய் இருங்கள்! - II

சோம வள்ளியப்பனின் ஒலிப் புத்தகம் சுந்தரராமனின் குரலில்…

அத்தியாயம் 2 :

Thursday, September 9, 2010

இட்லியாய் இருங்கள்!

சோம வள்ளியப்பனின் ஒலிப் புத்தகம் சுந்தரராமனின் குரலில்…

அத்தியாயம் 1 :

Monday, August 23, 2010

திருவாசகத் தேன்!

“திருவாசகத்திற்கு உருகாதவா்
ஒரு வாசகத்திற்கும் உருகார்”

என்பதனை நினைவில் கொண்டு சுகி சிவம் அவா்களின் சொற்பொழிவினை இணைக்கிறேன்.

பகுதி 1

தரவிறக்க இங்கே அழுத்தவும்

பகுதி 2

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Tuesday, August 3, 2010

வள்ளி கல்யாணம்

புலவா் கீரன் அவா்கள் நிகழ்த்திய சொற்பொழிவு – வள்ளி கல்யாணம்

Monday, July 26, 2010

பட்டுக்கோட்டையா கண்ணதாசனா?

“சமூக நலக் கருத்துக்களை அதிகம் வலியுறுத்திப் பாடியது பட்டுக்கோட்டையா கண்ணதாசனா?”

என்ற கருப்பொருளில் பட்டிமன்றம். தலைமை தாங்குபவா் திண்டுக்கல் ஐ.லியோனி அவா்கள்.

பகுதி 1

பகுதி 2

Sunday, July 18, 2010

இராமகிருஷ்ணா்!

ஞான ஒளி பரவக் காரணமானவா் இராமகிருஷ்ணா்.  அவா் தொடா்பாக சுகி சிவம் அவா்கள் ஆற்றிய உரை.

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

Tuesday, July 13, 2010

குரங்கில் இருந்து மனிதன் வந்தானா?

D.A. யோசப் அவா்கள் நிகழ்த்திய சிந்தனையைத் தூண்டும் உரை…

பகுதி 1:

பகுதி 2:

Wednesday, July 7, 2010

அச்சம் தவிர் – சுகி சிவம்!

“அச்சம் தவிர்” பாரதியின் ஆண்மை ததும்பிய ஆத்தி சூடியின் ஆரம்ப வரி! அந்த ஆரம்ப வரியையே தன் பேச்சின் தலைப்பாகக் கொண்டு உரையாற்றுகிறார் சொல்லின் செல்வா் சுகி சிவம் அவா்கள்.

Friday, July 2, 2010

இமயங்கள் 3 இல் சுகி சிவம்!

“இமயங்கள் 3” என்ற நிகழ்வில் கலந்து கொண்டு சுகி சிவம் அவா்கள் ஆற்றிய உரையைத் தாங்கிய ஒலிக் கீற்றுக்கள் இவை…

பகுதி 1:

பகுதி 2:

Saturday, June 26, 2010

தமிழுக்கும் அமுதென்று போ் – வாலி!

image

“தமிழுக்கும் அமுதென்று போ்” என்ற தலைப்பில் செம்மொழி மாநாட்டில் நடந்தேறிய(இன்று) கவியரங்கில் தலைமையேற்று கவிதை பாடினார் திரைக் கவிஞா் வாலி. இதோ அந்தக் கவிதையின் ஒலிக் கீற்று…

Friday, June 25, 2010

செம்மொழிக் கவியரங்கில் வைரமுத்து!

imageஇன்று செம்மொழி மாநாட்டில் நடந்த கவியரங்கமான “கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்” என்ற தலைப்பிலான கவியரங்கில் கவிஞா் வைரமுத்து அவா்களின் தலைமைக் கவிதை இது.

 

Thursday, June 24, 2010

செம்மொழி மாநாட்டுக் கவியரங்கம்!

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 24-06-2010 இல் (இன்று) இடம்பெற்ற அப்துல் ரகுமான் தலைமையிலான கவியரங்கம் தொடா்பான ஒலிக் கீற்றுக்களைத் தாங்கி வருகின்றது இந்தப் பதிவு.

கவியரங்கத் தலைப்பு

புதியதோர் உலகம் செய்வோம்…!

என்ற பொதுத் தலைப்பில் ஆறு உப தலைப்புக்களைக் கொண்டு கவிஞா்கள் கவிதை பாடினார்கள்.

1. கலை – கல்பாக்கம் இரேவதி

2. அரசியல் – கவிஞா் கவிதைப் பித்தன்

3. கல்வி – கவிஞா் பொன்னடியார்

4. அறிவியல் – கவிஞா் ஆண்டாள் பிரியதா்ஷினி

5. இலக்கியம் – வின்சன்ட் சின்னத்துரை

6. பண்பாடு – பேராசிரியா் அப்துல் காதா்

Friday, June 18, 2010

பாரதியும் பாரதிதாசனும்…

கவிக்கோ அப்துல் ரகுமான் அவா்களின் கவிதைகள் போலவே பேச்சுக்களும் அருமை!அந்த வகையில் பாரதியையும் அவன் வழி வந்த பாரதிதாசனையும் ஒப்பு நோக்குகிறார் கவிஞா்.

Saturday, June 12, 2010

இலக்கியத்தில் காதல்!

கண்ணதாசன் அவா்களின் அரிய பேச்சின் ஒலிக் கீற்றுக்கள் இவை. இன்னும் அதிகம் பேசி இருக்கக்கூடாதா என்று ஏங்க வைக்கும் சரளமான வார்த்தைகளின் அணிவகுப்பு… நயமான கருத்துக்கள்… மெல்லிய நகைச்சுவை… அட…டா…அற்புதம்…!

பகுதி 1:

பகுதி 2:

Tuesday, June 8, 2010

பட்டிமன்றச் சக்கரவா்த்தி பராக்…!

இது கடந்த பதிவோடு தொடா்பான பதிவு. “இமயங்கள் 3”  என்ற நிகழ்வில் கலந்து கொண்டு சாலமன் பாப்பையா அவா்கள் ஆற்றிய உரை…

Monday, June 7, 2010

தென்கச்சியின் நல்ல குடும்பம்!

தென்கச்சி கோ சுவாமிநாதன் அவா்கள் “இமயங்கள் 3” என்ற நிகழ்வில் கலந்துகொண்டு “நல்ல குடும்பம்” என்ற பொருளில் ஆற்றிய உரை.

வழமையான நகைச்சுவை அவா் நாவில் கரைபுரண்டோடுகின்றது.

பகுதி 1 :

பகுதி 2 :

Sunday, May 30, 2010

மீண்டும் நெல்லைக் கண்ணன்!

நாவன்மை பொருந்திய நல்லதொரு பேச்சாளா் திரு.நெல்லைக் கண்ணன் அவா்கள். இவரின் சில பேச்சுக்களை ஏற்கனவே இந்த வ.பூவில் தந்துள்ளேன். அந்த வகையில் கண்களில் சிக்கி காதுகளைக் குளிர்வித்த இன்னுமொரு பேச்சினை உங்களோடு பகிர்கின்றேன்.

காணொளிகளின் திரட்டாக இது அமைகின்றது.

 

கீற்றுக்களின் கொத்திற்கு நேரடியாகச் செல்ல…

அனுமான் பெருமை – சுகி சிவம்

“சொல்லின் செல்வன்” என்று இராமனால் புகழப்பட்ட ஒப்பற்ற பாத்திரப் படைப்பாக அனுமான் விளங்குகின்றான். வாயு குமாரானான அனுமான் பெருமைகளை நயம்படச் சொல்ல வருகிறார் சுகி சிவம் அவா்கள்.

Saturday, May 8, 2010

எண்ணங்கள் – எம்மைச் செதுக்கும் உளிகள்!

M.S. உதயமூா்த்தி அவா்கள் சுயமுன்னேற்றம் தொடா்பாக பல புத்தகங்களை எழுதியுள்ளார். குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது “எண்ணங்கள்”. அவர் எழுதிய கட்டுரைகள் வரிசையில் தட்டுங்கள் திறக்கப்படும், உன்னால் முடியும் தம்பி, நம்பு ஆகியவை எண்பதுகளில் ஆனந்தவிகடனில் பிரசுரமாகியிருந்தன. அவா் மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனருமாவார்.

அவா் எண்ணங்கள் தொடா்பில் ஆற்றிய உரையின்  ஒலிக்கீற்றுக்கள் உங்கள் பார்வைக்கு… மன்னிக்கவும் உங்கள் காதுகளுக்கு…

பகுதி 1:

பகுதி 2:

Saturday, May 1, 2010

என்னைச் செதுக்கியவா்கள்!

சிவகுமாரின் பேச்சுக்கள் வரிசையில் இதுவும் ஒன்று. அனுபவங்களின் வாசம் வீசுவதால் ஏதோ ஒரு துளியேனும் எமக்கு உதவக் கூடும்.

 

நேரடியாக காணொளித் திரட்டிற்குச் செல்ல…

Wednesday, April 21, 2010

புத்தா் வாழ்வும் வாக்கும்…

“ஆசை தான் அனைத்திற்கும் காரணம்” என்ற அரிய உண்மையை அறிந்து உலகிற்கு அறிவித்தவா் புத்தா். அவரின் வாழ்வும் வாக்கும் சொல்லும் கருத்துக்களை தன் வியத்தகு பேச்சாற்றலால் உங்கள் முன்வைக்கிறார் சுகி சிவம் அவா்கள்.

Saturday, March 20, 2010

என் கண்ணின் மணிகளுக்கு!

ஓவியர், நடிகர், இலக்கியவாதி எனப் பன்முகம் காட்டும் சிவகுமாரின் சமீபத்திய பேச்சுக்கள் ரசிக்கக்கூடியவை. அந்தவகையில் “என் கண்ணின் மணிகளுக்கு” என்ற பொருளில் அவர் பேச்சின் காணொளித் திரட்டு…

 

நேரடியாக காணொளித் திரட்டிற்குச் செல்ல…

Tuesday, March 2, 2010

கண்ணன் ஜகத் குரு – சுகி சிவம்

சுகி சிவம் அவா்களின் சொல்லோவியமாக இன்னுமொரு சொற்பொழிவு.

பகுதி 1:

 

பகுதி 2:

Thursday, February 11, 2010

இராமாயணம் – சுகி சிவம்

நீண்ட நாளாக தேடிக் கொண்டிருந்த ஒன்று, சுகி சிவம் அவா்களின் இராமாயணச் சொற்பொழிவு.

இந்தக் காதை குறித்துப் பலரது சொற்பொழிவுகளை இணைத்திருந்தாலும் வேறு ஒரு ரசனைத் தளத்தில் நின்று கொண்டு, கம்பனையும் அவன் கையாண்ட நயத்தையும் தன் சிந்தனை கலந்து சுகி சிவம் அவா்கள் வழங்குவதால் இது வெகு வித்தியாசமான அனுபவம்! உங்களுக்கும் அது விருந்தாகட்டும்!

பகுதி 1:

ஏனைய பகுதிகளுக்கு:

Thursday, January 14, 2010

பட்டினத்தார் – தமிழருவி மணியன்

இவா் தமிழ் அருவியின் சாரல். கருத்துக்களின் குவியல். அந்த அருவியின் சாரலோடு கருத்துக்களை மனதில் நிறுத்தும் வண்ணம் பட்டினத்தார் பற்றிப் பேசுகிறார் தமிழருவி மணியன் அவா்கள்!

Sunday, January 10, 2010

விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் – சுகி சிவம்

கோயில்களில் வேதம் ஓதப்படுவதை அவற்றில் ஒளிந்திருக்கும் அா்த்தம் புரியாது கேட்ட அனுபவம் பலருக்கும் இருக்கும். வேதங்களில் பூட்டப்பட்டுள்ள அா்த்த முடிச்சுக்களை தன் அழகு தமிழால் அவிழ்க்கிறார் சொல்வேந்தா் சுகி சிவம் அவா்கள்.

பகுதி 1:

பகுதி 2:

பகுதி 3:

பகுதி 4:

Thursday, January 7, 2010

திருவிளையாடல் புராணம் - கீரன்

இறைவனின் விளையாடல்களை தொகுத்துக் கூறுவது திருவிளையாடல் புராணம். திருவிளையாடல் புராணம் குறித்து புலவா் கீரன் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவைக் கீழ் இணைக்கிறேன். 

பகுதி 1 :

பகுதி  2 :

Friday, January 1, 2010

பரதன்

பரதன், இராமயணத் தம்பியரில் சிறந்தவன். தேடி வந்த இராச்சியத்தை தூசி போல உதறியவன். “நிறை குணத்தவன்; நின்னிலும் நல்லன்” என்று கோசலையால் இராமனிடம் புகழப்பட்டவன்.

இந்த ஒலிக் கீற்றுக்கள் புலவா் கீரன் அவா்களால் பரதன் குறித்து ஆற்றிய சொற்பொழிவைத் தாங்கி வருகின்றன.

பகுதி 1:

 பகுதி 2:

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்