Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...
Showing posts with label இதிகாசங்கள். Show all posts
Showing posts with label இதிகாசங்கள். Show all posts

Saturday, January 26, 2013

பால காண்டம்– இ.ஜெயராஜ் (கம்பவாரிதி)

வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை தமிழில், தமிழ் மரபுக்கு ஏற்ற வண்ணம் பாடி கம்பராமாயணம் என்று தமிழ் உலகு கொண்டாடும் வழி செய்தவன் கம்பன். வால்மீகி இராமாயணத்தை கிளிப் பிள்ளை போல் அப்படியோ ஒப்பித்திருக்கிறேன் என்று சொல்லி விட்டு புதுமைகள் பல செய்திருப்பான்.

imageஅந்த கம்பராமாயணத்தில் ஆறு காண்டங்கள் உண்டு. அதில் முதலாவது வரக்கூடிய பால காண்டத்தைப் பற்றி இலங்கையில் தமிழர்களிடம் நன்கு அறியப்பட்ட (தமிழகத்திலும்…) “கம்பவாரிதி” என்று அழைக்கப்படுகின்ற இ.ஜெயராஜ் அவர்கள் கொழும்பு தமிழ் சங்கத்தில் ஆற்றிய சொற்பொழிவு இணையத்தில் காணக்கிடைத்தது.

நல்ல யாழ்பாணத் தமிழில் சொற்பொழிவை கேட்டு இன்புற விரும்பும் அன்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

எட்டு காணொளிக் கீற்றுக்களின் கொத்தாக இதனை இணைக்கிறேன்.

நேரடியாக கீற்றுகளின் திரட்டுக்குச் செல்ல இங்கே அழுத்துங்கள்.

Thursday, February 11, 2010

இராமாயணம் – சுகி சிவம்

நீண்ட நாளாக தேடிக் கொண்டிருந்த ஒன்று, சுகி சிவம் அவா்களின் இராமாயணச் சொற்பொழிவு.

இந்தக் காதை குறித்துப் பலரது சொற்பொழிவுகளை இணைத்திருந்தாலும் வேறு ஒரு ரசனைத் தளத்தில் நின்று கொண்டு, கம்பனையும் அவன் கையாண்ட நயத்தையும் தன் சிந்தனை கலந்து சுகி சிவம் அவா்கள் வழங்குவதால் இது வெகு வித்தியாசமான அனுபவம்! உங்களுக்கும் அது விருந்தாகட்டும்!

பகுதி 1:

ஏனைய பகுதிகளுக்கு:

Friday, September 18, 2009

மஹாபாரதம் – மறுபடியுமா?

அதென்னவோ தெரியவில்லை. இந்தக் காதை தொடா்பான பதிவுகள் அடிக்கடி என் வ.பூவில் இடம்பெறும் ஒன்று.(தலைப்பின் காரணம் அதுதான்!) அந்த வரிசையில் இது “புலவா் கீரன்” அவா்களின் அற்புதச் சொல்லாற்றலில்… அழகு தமிழ் நடையில்… இனிக்கும் தமிழில்… தவழ்ந்து வரும் மகாபாரதச் சொற்பொழிவு!

[இதனை ஆரம்பத்தில் ஒலி வடிவில் பதிவேற்றிய நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்!]

 

»ஒலிக் கீற்றுக்களின் திரட்டை நேரடியாக செவிக்குணவாக்க…

 

---இது தொடா்பாக ஏற்கனவே வந்த பதிவுகள்---

»இங்கே அழுத்திப் பார்வையிடவும்…

Monday, August 10, 2009

கம்பன் என் காதலன்!

“ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
பூசை முற்றவு நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக்
காசில் கொற்றத் திராமன் கதையரோ”

[பொருள் : ஓசையால் உயர்ந்த பாற்கடல் போய் ஒரு பூனை பாற்கடல் முழுமையும் குடுக்க முயல்வது எவ்வளவு அறியாமையோ… அதே போன்றது குற்றமற்ற இராம சரிதத்தை அடியேன் ஆசை கொண்டு பாட முயல்கின்ற செயலும்.]

மேலே உள்ள பாடல் கம்பனின் அவையடக்கப் பாடல்களில் ஒன்று. இப்படி அவையடக்கம் பேசிய கம்பன் இராமாயணம் முழுமையும் வம்பாக செய்தவை ரசிக்கத் தக்கவை.

இவ்வளவும் எதற்காக நீ எழுதுகின்றாய் என்று யாராவது கேள்வி கேட்டால் நான் சொல்லக் கூடிய பதில் எனக்குத் தெரிந்ததை சொல்வதற்கு வேறு இடம் கிடைக்கவில்லை என்பதே! (அட பாவி…!)

சரி அஃதிருக்க  கீழே நீங்கள் காணும் காணொளி திரை உலக மார்க்கண்டேயர் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் சிவகுமார் அவர்களின் ஆழந்த இலக்கியப் புலமையைச் செப்பக்கூடிய ஒன்றாகும்.

 

(குறிப்பு : மேலே உள்ள காணொளியை முழுவதுமாக கண்டுகளிக்க/தரவிறக்க Veoh Web Player ஐ தரவிறக்கவேண்டி ஏற்படலாம்.)

 

Friday, July 31, 2009

மஹாபாரதம் – தமிழில்…

அது என்னவோ தெரியல இந்தப் பதிவும் மஹாபாரதம் தொடர்பான பதிவாகவே அமைந்து விட்டது. பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் எம்.ரி.வீ தொலைக்காட்சியில் ஒளி/ஒலிபரப்பான போது கையில் தினமுரசுப் பத்திரிகையில் வெளிவந்த தமிழ் மொழி பெயர்ப்பை வைத்துக் கொண்டு பார்த்து ரசித்த தொடர். (பலருக்கும் நினைவு இருக்கலாம்.)

தமிழில் கண்டு களிக்க… (காணொளிகளின் திரட்டு)

 

» காணொளிகளின் திரட்டு - நேரடிச் சுட்டி

Sunday, July 26, 2009

மறுபடியும் மகா(ஹா)பாரதம்! - III

இந்தப் பதிவு கடந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாக அமைகிறது. சுகி சிவம் அவர்கள் ஆற்றிய “மகாபாரதம்” என்ற பொருளில் ஆன சொற்பொழிவின் மிகுதிப் பகுதிகளை இணைத்து நிறைவு செய்கிறேன்.

Powered by eSnips.com

 

» எல்லாப் பகுதிகளும் ஒரே இடத்தில்…

Wednesday, July 22, 2009

மறுபடியும் மகா(ஹா)பாரதம்! - II

கடந்த பதிவில் சுகி சிவம் அவர்களின் அற்புத சொல்லாற்றலில் மகாபாரதம் சொற்பொழிவின் இரு பகுதிகளை இணைத்திருந்தேன்.

இந்தப் பதிவில் மேலும் சில… (தொடர்ச்சியாக இழுக்கும் எண்ணம் எதுவுமில்லை. ஆகக்கூடியது இன்னுமொரு பதிவு…)

பகுதி 03 – பகுதி 09

Powered by eSnips.com

 

» பகுதி 01 – பகுதி 09 ஒரே இடத்தில்…

Saturday, July 18, 2009

மறுபடியும் மகா(ஹா)பாரதம்!

கதை கேட்டு வளர்ந்த சமூகம் எங்கள் தமிழ்ச் சமூகம். நீதிக் கருத்துகளையும் வாழ்வியலையும் கதைகளில் சொல்வதன் மூலம் கேட்பவர் உள்ளத்தில் ஆழப் பதிய வாய்ப்பு  உண்டு.

அந்த வகையில் இரு மா(பெரிய) கதைகள் என்று சொல்லக்கூடிய சிறப்பிற்குரியன இரு பெரு இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகியனவாகும். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத மனது விரும்புகின்ற வகையில் இவை இரண்டும் அமைவது ஒரு வித வியப்புத் தான்.

இந்தப் பதிவில் மகாபாரதம் என்று மா காதையை, வியாசர் சொல்ல பிள்ளையார் தன் தந்தத்தால் எழுதிய காதையை, அதை அப்படியே வைஷ்ணவரான வில்லி புத்தூராள்வார் தமிழில் எழுதிய காதையை அடியேன் மறுபடியும் எழுதப்போவதில்லை. (அடே போதுமடா…!!!)

சொல் வேந்தர் சுகி சிவம் அவர்கள் அவர் பாணியில் தன் அழகு தமிழால் சொல்ல வருகின்றார்.

பகுதி 1 :

Get this widget | Track details | eSnips Social DNA

 

பகுதி 2:

Get this widget | Track details | eSnips Social DNA

 

மற்றைய பகுதிகளை அடுத்த பதிவில் இணைக்கிறேன்.

Friday, May 29, 2009

மகா(ஹா)பாரதம் – தொகுப்பு 1

இதிகாசங்களில் ஒன்றான “மகாபாரதம்” மாபெரும் கடல். அந்தக் கடலின் துளிகளை ஒலிக் கீற்றுகள் வாயிலாக கேட்க விரும்பியவர்களுக்கு இந்தப் பதிவு…

 

பகுதி 1 : சந்திரவம்சம்

Get this widget | Track details | eSnips Social DNA

பகுதி 2 : சந்திரவம்சம் (தொடர்ச்சி)

Get this widget | Track details | eSnips Social DNA

பகுதி 3 : சந்திரவம்சம் (தொடர்ச்சி)

Get this widget | Track details | eSnips Social DNA

பகுதி 4 : கிருஷ்ண அவதாரம்

Get this widget | Track details | eSnips Social DNA

பகுதி 5 : கிருஷ்ண அவதாரம் (தொடர்ச்சி)

Get this widget | Track details | eSnips Social DNA

 

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்