வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை தமிழில், தமிழ் மரபுக்கு ஏற்ற வண்ணம் பாடி கம்பராமாயணம் என்று தமிழ் உலகு கொண்டாடும் வழி செய்தவன் கம்பன். வால்மீகி இராமாயணத்தை கிளிப் பிள்ளை போல் அப்படியோ ஒப்பித்திருக்கிறேன் என்று சொல்லி விட்டு புதுமைகள் பல செய்திருப்பான்.
அந்த கம்பராமாயணத்தில் ஆறு காண்டங்கள் உண்டு. அதில் முதலாவது வரக்கூடிய பால காண்டத்தைப் பற்றி இலங்கையில் தமிழர்களிடம் நன்கு அறியப்பட்ட (தமிழகத்திலும்…) “கம்பவாரிதி” என்று அழைக்கப்படுகின்ற இ.ஜெயராஜ் அவர்கள் கொழும்பு தமிழ் சங்கத்தில் ஆற்றிய சொற்பொழிவு இணையத்தில் காணக்கிடைத்தது.
நல்ல யாழ்பாணத் தமிழில் சொற்பொழிவை கேட்டு இன்புற விரும்பும் அன்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
எட்டு காணொளிக் கீற்றுக்களின் கொத்தாக இதனை இணைக்கிறேன்.
நேரடியாக கீற்றுகளின் திரட்டுக்குச் செல்ல இங்கே அழுத்துங்கள்.
0 பின்னூட்டல்கள்:
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்