ஒளவையார் என்று சொல்லும் போது நமக்குள் விரிகின்ற தோற்றம் கூன் விழுந்த ஒரு கிழவி… ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்றவற்றை நமக்கு தந்த தமிழ் கிழவி… என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு மட்டுமே பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் அண்மையில் இணையத்தில் நான் கேட்ட சாரதா நம்பி ஆரூரன் அவர்களின் இந்த உரையின் வாயிலாக பல அரிய பெரிய தகவல்களை அறிந்து கொண்டேன். வேறு எவருக்கேனும் ஔவையார் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் இருப்பின் அவர்களுக்கு இந்தப் பதிவு உதவும் என்று நம்புகிறேன்.
காணொளிக் கீற்றுக்களின் திரட்டிற்கு செல்ல இங்கே அழுத்துங்கள்.





“எங்கே போகிறோம் நாம்?” இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கின்றோம். இந்தக் கேள்வியைத் தலைப்பாக்கி சிந்தனை முத்துக்களை விதைக்க வருகின்றார் தமிழருவி மணியன்! கேளுங்கள்… சிந்தனைப் பூக்களை மனதோரம் மலர விடுங்கள்…!
பஞ்சாமிர்தம் சுதா சேஷய்யன் அவர்களின் சில சொற்பொழிவுகளை ஏற்கனவே தந்திருக்கிறது. அந்த வகையில் அவரின் சொற்பொழிவொன்றை தாங்கி வருகிறது இந்த இனிய நாளில். இந்தச் சொற்பொழிவை ஏற்கனவே இணையத்தில் தரவேற்றிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி!