தாய் மூலம் பூமிக்கு வருகிறோம். பானை வனையும் குயவன் போல உடல் செய்து உடலுக்குள் உயிர் உலவவிட்டு தாய் மூலம் பூமிக்கு அனுப்புகிறார் கடவுள்! தான் எங்கும் இருக்க முடியாது என்று கருதியதால் கருணையை அன்பை காதலை தாய் மூலம் உயிர்களுக்கு ஊட்டுகிறான் ஒளி போல் தெரியும் மேனியன்!
என்றும் துறக்கமுடியாத இச்சொந்தம் ஞானிகளையும் விட்டுவிடுவதில்லை என்பதற்குப் பட்டினத்தார் சாட்சி!
ஒப்புயா்வற்ற இச்சொந்தம் பற்றி அவள் சிறப்புகள் பற்றி அன்னை தமிழை அருகழைத்து அருவியாய் சொற்கள் தாவென இறைஞ்சி, வேண்டி தாயின் மேனியெங்கும் தங்கம் என தக தகக்கும் தமிழ் கொண்டு அழகு செய்கிறார் தமிழருவி மணியன் அவா்கள்!
இது தமிழருவி மணியன் அவா்களின் அற்புதச் சொல்லாற்றலால் இழைக்கப்பட்ட பேச்சு! கேட்பீா்! தாயைக் கொண்டாடுவீா்!
தரவிறக்க இங்கே அழுத்தவும்