சங்கத் தமிழன் “யாதும் ஊரே யாவரும் கேளிர்…” என்று உலக ஒருமையைப் பற்றி என்றைக்கோ சிந்தித்து விட்டான். கணியன் பூங்குன்றனார் என்ற அந்தப் புலவனின் சிந்தனை விசாலமானது. தொடர்ந்து வரும் வரிகளைப் பாருங்கள். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” எத்தனை உயா்ந்த உண்மை!
தமிழருவி மணியன் அவா்கள், யாதும் ஊரே யாவரும் கேளிர்… என்ற வரிகளோடு சிந்திக்கும் வகையில் ஆற்றும் உரை இது…
முதலில் அந்தப் பாடலின் முழு வடிவம்:
யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றாலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.
சரி இனி தமிழருவி மணியனை செவிமடுப்போம்.
3 பின்னூட்டல்கள்:
சிறப்பான பதிவு ! வாழ்த்துக்கள் சார் ! நன்றி !
அமிழ்தனைய தமிழ்ச்சுவையை அருந்தி மகிழச்செய்த
கவிஞர்க்கு நன்றி
குழலிபெருமாள்
How to download can you give password
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்