எல்லோருக்கும் படியளப்பதாக சொல்லப் படும் கடவுள் யாசகம் கேட்பதாவது? இந்தக் கேள்வியை தொடுத்து சுவைபட உரையாற்றுகிறார் இளம்பிறை மணிமாறன் அவர்கள்.
தரவிறக்க இங்கே அழுத்தவும்
எல்லோருக்கும் படியளப்பதாக சொல்லப் படும் கடவுள் யாசகம் கேட்பதாவது? இந்தக் கேள்வியை தொடுத்து சுவைபட உரையாற்றுகிறார் இளம்பிறை மணிமாறன் அவர்கள்.
தரவிறக்க இங்கே அழுத்தவும்
“எங்கே போகிறோம் நாம்?” இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கின்றோம். இந்தக் கேள்வியைத் தலைப்பாக்கி சிந்தனை முத்துக்களை விதைக்க வருகின்றார் தமிழருவி மணியன்! கேளுங்கள்… சிந்தனைப் பூக்களை மனதோரம் மலர விடுங்கள்…!
காணொளிக் கீற்றுக்களின் கொத்து (ஒன்பது கீற்றுக்களைக் கொண்டது.)
நேரடியாக கீற்றுகளின் திரட்டுக்குச் செல்ல இங்கே அழுத்துங்கள்.
ஒலிக் கீற்றினை மட்டும் தரவிறக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.
வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை தமிழில், தமிழ் மரபுக்கு ஏற்ற வண்ணம் பாடி கம்பராமாயணம் என்று தமிழ் உலகு கொண்டாடும் வழி செய்தவன் கம்பன். வால்மீகி இராமாயணத்தை கிளிப் பிள்ளை போல் அப்படியோ ஒப்பித்திருக்கிறேன் என்று சொல்லி விட்டு புதுமைகள் பல செய்திருப்பான்.
அந்த கம்பராமாயணத்தில் ஆறு காண்டங்கள் உண்டு. அதில் முதலாவது வரக்கூடிய பால காண்டத்தைப் பற்றி இலங்கையில் தமிழர்களிடம் நன்கு அறியப்பட்ட (தமிழகத்திலும்…) “கம்பவாரிதி” என்று அழைக்கப்படுகின்ற இ.ஜெயராஜ் அவர்கள் கொழும்பு தமிழ் சங்கத்தில் ஆற்றிய சொற்பொழிவு இணையத்தில் காணக்கிடைத்தது.
நல்ல யாழ்பாணத் தமிழில் சொற்பொழிவை கேட்டு இன்புற விரும்பும் அன்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
எட்டு காணொளிக் கீற்றுக்களின் கொத்தாக இதனை இணைக்கிறேன்.
நேரடியாக கீற்றுகளின் திரட்டுக்குச் செல்ல இங்கே அழுத்துங்கள்.
200வது பதிவு இது. இணையத்தில் உலா வருகையில் நான் பார்த்துக் கேட்டுச் சுவைத்ததை பலரும் சுவைத்து இன்புறும் வண்ணம் பதிவிட்டு வந்திருக்கிறேன். இதற்காக என்னை பாராட்ட வேண்டிய அவசியம் எதுவுமில்லை. ஆரம்பத்தில் ஒலி, ஒளிக் கீற்றுக்களை பதிவேற்றிய நல்ல உள்ளங்களை நினைத்துப் பார்த்தால் போதுமானது. வேறு என்ன… சரி இன்றைய பகிர்தலைப் பார்ப்போம்.
சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவுகளை பலமுறை பதிவிட்டு வந்துள்ளேன். அந்த வரிசையில் இந்த 200வது பதிவு அவரின் சொற்பொழிவு ஒன்றைத் தாங்கி வருகிறது. கேட்டுப் பயன்பெறுங்கள்.
ஒரு சின்ன வேண்டுகோள் முகப் புத்தகத்தில் பஞ்சாமிர்த்திற்கான பிரத்தியேக பக்கத்தில் உங்கள் விருப்பை (Like) தெரிவியுங்கள்.
சொற்பொழிவுக்கான காணொளி இணைப்பு
ஒலிக் கீற்றினை மட்டும் தரவிறக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.
சொல்லவே தேவையில்லை இவரைப் பற்றி. சொல் வேந்தரின் அற்புதமான உரை வரிசையில் இன்னுமொன்று…
தரவிறக்க இங்கே அழுத்துங்கள்
நக்கல் பேச்சின் ஊடாக சிந்தனை விதைகளை தூவுவதில் வல்லவா் நெல்லைக்கண்ணன் அவா்கள். அவா் பேச்சுக்கள் பலவற்றை ஏற்கனவே உங்கள் செவிகளுக்கு உணவாக பஞ்சாமிர்தத்தில் தந்திருக்கிறேன். அந்த வகையில் அவரின் இன்னுமொரு பேச்சு இது. என்ன கேட்போமா?
காணொளிகளின் திரட்டு கீழே…
ஒலிக் கீற்று
தரவிறக்க விரும்பினால், இங்கே அழுத்தவும்