Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Friday, August 31, 2012

ஆதித்திய கிருதயம் - சுதா சேஷய்யன்

ஆதித்திய கிருதயம் என்பது சூரியனுக்கான மந்திரமாகும். ஆதித்தியன் என்பது சூரியனைக் குறிக்கும். இராமாயணத்தில் அகத்திய முனிவா் இராமனிடம், “ஆதித்திய கிருதயத்தை கூறு புதிய சக்தியும் உற்சாகமும் கிடைக்கும்” என்று சொல்ல அவ்வாறு இராமனும் கூறி களைப்பு நீங்கி, இராவணனுடன் போர் புரிந்தார்.

அத்தகைய ஆதித்திய கிருதயம் பற்றி சுதா சேஷய்யன் அவா்கள் ஆற்றுகின்ற உரை இது.

இதன் ஒலி வடிவை மட்டும் தரவிறக்க இங்கே அழுத்தவும்

Sunday, August 12, 2012

லலிதா சஹஸ்ரநாமம்–சுகி சிவம்

லலிதா சஹஸ்ரநாமம் பற்றி சொல் வேந்தா் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு இது…

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Tuesday, July 3, 2012

யாதும் ஊரே யாவரும் கேளிர் – தமிழரு மணியன்!

சங்கத் தமிழன் “யாதும் ஊரே யாவரும் கேளிர்…” என்று உலக ஒருமையைப் பற்றி என்றைக்கோ சிந்தித்து விட்டான். கணியன் பூங்குன்றனார் என்ற அந்தப் புலவனின் சிந்தனை விசாலமானது. தொடர்ந்து வரும் வரிகளைப் பாருங்கள். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” எத்தனை உயா்ந்த உண்மை!

தமிழருவி மணியன் அவா்கள், யாதும் ஊரே யாவரும் கேளிர்… என்ற வரிகளோடு சிந்திக்கும் வகையில் ஆற்றும் உரை இது…

முதலில் அந்தப் பாடலின் முழு வடிவம்:

யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றாலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.

சரி இனி தமிழருவி மணியனை செவிமடுப்போம்.

Sunday, May 27, 2012

உயிர் விடும் மூச்சு…–கவிஞா் அறிவுமதி!

ஒரு தாயின் பனிக் குடத்தில் நீந்திக் கொண்டிருக்கும் பெண் குழந்தை ஒன்று பேசுவதாக அமைந்த கவிஞர் அறிவுமதியின் கவி வரிகள் இசையோடு கை கோர்த்து கவிஞரின் குரலில் நடை பயில்கின்றது.

Thursday, May 24, 2012

குருவும் திருவும் – சுகி சிவம்

சுகி சிவம் ஆற்றும் சொற்பொழிவு ஒன்று காணொளி வடிவில் காணக் கிடைத்தது. பகவான் இராமகிருஷ்ணா் அவா்களின் குருவருள் பற்றி சொற்பொழிவு தொட்டுச் செல்கின்றது. அவ் காணொளிக் கீற்றுக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

காணொளிக் கீற்றுக்களை நேரடியாக பார்வையிட…

Friday, April 27, 2012

சுவாமியே சரணம்!–சுகி சிவம்

சொல்வேந்தா் சுகி சிவம் அவா்களின் சொற்பொழிவு வரிசையில் இன்னுமொன்று…

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Thursday, April 19, 2012

அ–குறும்படம்

நெஞ்சைத் தொட்ட குறும்படங்களை அவ்வப்போது பஞ்சாமிர்தத்தில் பகிர்ந்து வந்துள்ளேன். அந்த வகையில் இன்னுமொரு குறும்படம்…

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்