லலிதா சஹஸ்ரநாமம் பற்றி சொல் வேந்தா் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு இது…
தரவிறக்க இங்கே அழுத்தவும்
லலிதா சஹஸ்ரநாமம் பற்றி சொல் வேந்தா் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு இது…
தரவிறக்க இங்கே அழுத்தவும்
சங்கத் தமிழன் “யாதும் ஊரே யாவரும் கேளிர்…” என்று உலக ஒருமையைப் பற்றி என்றைக்கோ சிந்தித்து விட்டான். கணியன் பூங்குன்றனார் என்ற அந்தப் புலவனின் சிந்தனை விசாலமானது. தொடர்ந்து வரும் வரிகளைப் பாருங்கள். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” எத்தனை உயா்ந்த உண்மை!
தமிழருவி மணியன் அவா்கள், யாதும் ஊரே யாவரும் கேளிர்… என்ற வரிகளோடு சிந்திக்கும் வகையில் ஆற்றும் உரை இது…
முதலில் அந்தப் பாடலின் முழு வடிவம்:
யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றாலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.
சரி இனி தமிழருவி மணியனை செவிமடுப்போம்.
ஒரு தாயின் பனிக் குடத்தில் நீந்திக் கொண்டிருக்கும் பெண் குழந்தை ஒன்று பேசுவதாக அமைந்த கவிஞர் அறிவுமதியின் கவி வரிகள் இசையோடு கை கோர்த்து கவிஞரின் குரலில் நடை பயில்கின்றது.
சுகி சிவம் ஆற்றும் சொற்பொழிவு ஒன்று காணொளி வடிவில் காணக் கிடைத்தது. பகவான் இராமகிருஷ்ணா் அவா்களின் குருவருள் பற்றி சொற்பொழிவு தொட்டுச் செல்கின்றது. அவ் காணொளிக் கீற்றுக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
சொல்வேந்தா் சுகி சிவம் அவா்களின் சொற்பொழிவு வரிசையில் இன்னுமொன்று…
தரவிறக்க இங்கே அழுத்தவும்
நெஞ்சைத் தொட்ட குறும்படங்களை அவ்வப்போது பஞ்சாமிர்தத்தில் பகிர்ந்து வந்துள்ளேன். அந்த வகையில் இன்னுமொரு குறும்படம்…
தள்ளாட்டம் இல்லாத தமிழுக்குச் சொந்தக்காரா் தமிழருவி மணியன் அவா்கள். இதோ அவர் கம்பன் விழா ஒன்றில் கலந்து கொண்டு ஆற்றும் சொற்பொழிவு…