பிள்ளைகளை வளா்த்தல் ஒரு விதத்தில் கலை. தன் ஆசைகளை லட்சியங்களை பிள்ளை மேல் திணிக்காமல் பிள்ளையின் ஆசைகளையும் லட்சியங்களையும் மதித்து அவா்களை திறம்பட வழி நடத்தும் பெற்றோர் எமது சமுதாயத்தில் குறைவு.
அந்த வகையில் இந்த உரை இது குறித்த சிந்தனையை ஆலோசனையை வழங்கி சமுதாயத்திற்கு தேவையான விழிப்புணா்வை வழங்குகிறது.
சொல்வேந்தா் சுகி சிவம் ஆற்றும் இந்த உரை உங்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.
பகுதி 1 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பகுதி 2 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்


தாய் மூலம் பூமிக்கு வருகிறோம். பானை வனையும் குயவன் போல உடல் செய்து உடலுக்குள் உயிர் உலவவிட்டு தாய் மூலம் பூமிக்கு அனுப்புகிறார் கடவுள்! தான் எங்கும் இருக்க முடியாது என்று கருதியதால் கருணையை அன்பை காதலை தாய் மூலம் உயிர்களுக்கு ஊட்டுகிறான் ஒளி போல் தெரியும் மேனியன்!
இது தமிழருவி மணியன் அவா்களின் அற்புதச் சொல்லாற்றலால் இழைக்கப்பட்ட பேச்சு! கேட்பீா்! தாயைக் கொண்டாடுவீா்!